மேலும் அறிய

டாஸ்மாக் கடையில் இருந்து 46 லட்சத்தை கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது

அறிவழகன் சரிவர அரசு வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் 2016 ஜூலை மாதத்திலிருந்து 2018 மார்ச் மாதம் வரை கட்ட வேண்டிய பணத்தை முறையாக கட்டமால் கையாடல் செய்து வந்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடுகசாத்து கிராமத்தில் உள்ள 9321 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை  பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் 2016 ஆம் ஆண்டு முதல் ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (36) என்பவர் மேற்பார்வையாளராக  டாஸ்மாக் கடையில் பணி புரிந்து வந்துள்ளார்.


டாஸ்மாக் கடையில் இருந்து 46 லட்சத்தை கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் விற்பனை செய்யும் பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கமாகும்.  ஆனால் வடுகசாத்து டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனை செய்யும் பணத்தை கடையில் மேற்பார்வையாளர் அறிவழகன் சரிவர அரசு வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் 2016 ஜூலை மாதத்திலிருந்து 2018 மார்ச் மாதம் வரை கட்ட வேண்டிய பணத்தை முறையாக கட்டமால் கையாடல் செய்து வந்துள்ளார். மேலும் வடுகசாத்து டாஸ்மாக் கடையில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரையில் விற்பனையாகும்.

மேலும் டாஸ்மாக் கடையின் தணிக்கையில் வெளிவந்த தகவலில்  திருவண்ணாமலை  மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் வடுகசாத்து டாஸ்மாக் மதுபானக் கடையில் சுமார் 46 லட்ச ரூபாய் மேற்பார்வையாளர்  அறிவழகன் கையாடல் செய்தது தெரிய வந்தது.  அதுமட்டுமில்லாமல் அறிவழகன் அரசாங்கத்திற்கு மதுபான விற்பனை செய்த புள்ளி விவரத்தையும் தவறாக கொடுத்துள்ளது தெரியவந்தது.


டாஸ்மாக் கடையில் இருந்து 46 லட்சத்தை கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது

இதையடுத்து திருவண்ணாமலை டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் அறிவழகன் மீது புகார்  அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொணட குற்றப்பிரிவு காவல்துறையினர் வடுகசாத்து டாஸ்மார்க் கடை மேலாளர் அறிவழகன் 46 லட்ச ரூபாய் கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதன் பிறகு உடனடியாக அறிவழகனை கைது செய்த  குற்றப்பிரிவு காவல்துறையினர் திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் உள்ள  கிளை சிறையில் அவரை அடைத்தனர்.


டாஸ்மாக் கடையில் இருந்து 46 லட்சத்தை கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது

மேலும் அறிவழகனிடம் இருந்து 8 லட்ச ரூபாய் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  முறைகேடு நடைபெற்றடாஸ்மார்க் கடையில் பணிபுரியும்  மற்ற  ஊழியர்கள் இந்த முறைகேட்டில் சம்பந்தம் உள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது ஆரணி பகுதியில் இது போன்று டாஸ்மாக் மதுபானக் கடையில் மேலாளராகப் பணிபுரியும் ஒரு அரசு ஊழியர் 46 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

Vellore power cut: வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Vellore Airport: சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!
வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்
வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget