மேலும் அறிய
Advertisement
வேலூர், ராணிப்பேட்டையில் லீவு விட்டும் மழை இல்லை; லீவு விடப்படாத திருப்பத்தூரில் மழை...!
’’வேலூர், ராணிப்பேட்டையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை; ஆனால் விடுமுறை அளிக்கப்படாத திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது’’
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டும் இன்றி உள் மாவட்டங்களில் கனமழை பெழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், சில மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்டும், சில மாவட்டங்களுக்கு கிரீன் அலார்டும் விடப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை பொறுத்த வரை நேற்று முன்தினம் வரை மிதமான மழை பெய்து வந்தது நேற்று முழுவதும் வெயில் காய்ந்து வந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெழியும் என ரெட் ஆலார்ட் வீட்டிருந்தது வானிலை ஆய்வு மையம். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டனர். ஆனால் அருகே உள்ள மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்காததால் கடைசிவரை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பக்கத்து மாவட்ட விடுமுறை அறிவிப்பை ஏக்கத்தோடு பார்த்தவாரே பள்ளிக்கு சென்றனர். மழையை எதிர்பார்த்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்துதத்து விடுமுறை அளிக்கப்பட்டது ஆனால் அதற்கு தலைகீழாக இரு மாவட்டத்திலும் இதுவரை பொட்டு மழை கூட பெய்யவில்லை. ஆனால் பள்ளிகள் செயல்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் மழைபாதிப்புகளை 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 241 ஏரிகளில் 93 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியெற்றப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 369 ஏரிகளில் 173 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. மழை காரணமாக ஆறு, ஏரிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், நீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள பொன்னை ஆற்றில் சுமார் 1000 கனஅடி நீரும், குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் 300 கனஅடி நீரும், ராணிப்பேட்டை அணைகட்டு பாலாற்றில் சுமார் 7500 கனஅடி நீரும் வந்துகொண்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion