மேலும் அறிய

போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர் திடீர் மரணம் - முகத்தில் காயம் இருப்பதால் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

சாராய விற்பனையில் ஈடுபட்டதாக அழைத்துச் சென்று சிறையில் இறந்த நபரின் முகம் மற்றும் விரல்களில் ரத்தக்கறை படிந்து இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என திட்ட

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (48), இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில்  ஈடுபடுவதாக கூறி கடந்த 26 ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் நேற்று முன்தினம் காலை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 4 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர் திடீர் மரணம் - முகத்தில் காயம் இருப்பதால் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இந்த மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை மூடியதுடன் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல  அனுமதி மறுத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

மேலும்  சிலமணி நேரங்கள் கழித்து பாதிக்கப்பட்ட  உறவினர்களை மாவட்ட ஆட்சியரை  சந்திக்க காவல்துறை அனுமதிக்க அளிக்கப்பட்டது. பின்னர்  பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்து  தங்கமணியை காவல்துறையினர் தான் அடித்ததால் தான்  உயிரிழந்தார் எனவும்  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  காவல்துறையினர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதற்கு  மாவட்ட  ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் இந்த  சம்பவம்  தொடர்பாக  மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதியரசர் இதனை விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.  

போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர் திடீர் மரணம் - முகத்தில் காயம் இருப்பதால் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

மேலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறந்தவரின் முகம் மற்றும் விரல் பகுதிகளில் ரத்தக்காயம் இருப்பதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்த வேண்டும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதியரசர் பாக்யராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றுது. நீதியரசர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றும் திருப்தி அடையாத தங்கமணியின் உறவினர்கள் தங்கமணியின் முகம் மற்றும் விரல் பகுதிகளில் ரத்தக்காயம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரும் வரையில் உடலை வாங்க மறுத்து சென்றதால்  அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget