மேலும் அறிய

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

வேலூர் மத்திய சிறையில்  இருந்து மூன்று நாட்கள்  பரோலில் வந்த கொலைத் தண்டனை கைதி மாயாமாகியுள்ளார் . இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்  .

வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் , பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (27) . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை , அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்  . 

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பாகாயம் போலீஸார் பின்பு வேல்முருகன்  கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது மீது கொலைவழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில்  அடைத்தனர் . பின்பு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேல்முருகன் , கடந்த 2017 ஆம் ஆண்டு  வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார் .

 இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்று நாட்கள் பொது விடுமுறைக்கு  விண்ணப்பித்திருந்த வேல்முருகனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் மாலை வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது  .

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட வேல்முருகன் நேற்று , திங்கள் மாலை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் . ஆனால்   நேற்று இரவு வரை வேல்முருகன் சிறைக்கு திரும்பாததால் , வேலூர் சிறை  துறை நிர்வாகம் சார்பில் இன்று காலை பாகாயம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது . 

சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள புகாரில்  , மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடைய பேசிய , வேலூர் சிறை துறை அதிகாரிகள் , பொது விடுமுறையில்  சென்று தற்பொழுது மாயமாகியுள்ள வேல்முருகன் , ஏற்கனவே பலமுறை பரோலில் வீடு  சென்று உரிய நேரத்தில் சிறைக்கு  திரும்பியுள்ளார் . நேற்று மாலையும்  , தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை சந்தித்துவிட்டு  சிறைக்கு செல்வதாக  தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு , வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில் ,  வேல்முருகன் மாயமாகியிருப்பது பெரும் சந்தித்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

எனவே அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர் .

மருதமலை படத்தில் கைதி ஒருவரை வடிவேலு பரோலில் அழைத்துச் செல்வார். தாயை காணச் செல்லும் அந்த கைதி, அங்கிருந்து கம்பி நீட்டுவார். அது போன்று தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget