மேலும் அறிய
Advertisement
MGR Birthday: எம்ஜிஆர் பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி - வைரலாகும் புகைப்படம்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்.
ஆம்பூர் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படம் இடம்பெற்றது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மாதனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 பிறந்த நாள் விழா மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம் கீழ்மிட்டாளம் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை பிரிண்ட் செய்து வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அதிமுகவினர் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தின் மீது தற்போது எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion