மேலும் அறிய
Advertisement
Jolarpettai Railway Station: ரூ.16 கோடியில் நவீனமயமாகும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம்; பணிகள் தீவிரம், பயணிகள் மகிழ்ச்சி!
பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூ. 16 கோடியில் நவீனமயமாகிறது. பயணிகளின் அடிப்படை வசதிகள், புதிய கட்டிடங்கள், லிப்ட் வசதியுடன் ரயில்வே நிர்வாகப் பணிகள் தீவிரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூ.16 கோடியில் நவீன மயமாக்கப்பட ரயில் நிலையமாக மாற்றும் பணியில் ரயில்வே நிர்வாகம் தீவிர ஈடுபட்டு வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது ரயில் நிலையமும் ஏலகிரி மலையும்.
1809 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ மையம் உருவாக்கப்பட்டது.
அப்போது சென்னையில் உள்ள குடியேற்ற நிர்வாகத்துடன் புதிய சிவில் மற்றும் ராணுவ புற காவல் இடையே அதிக போக்குவரத்து தொடர்பு இருந்ததால் 1845 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது.
சென்னை ராயபுரம் - வாலாஜா ரோடு பாதை பணியை தொடங்கியது. 1856 ஆம் ஆண்டு ராயபுரம் - வாலாஜா ரோடு பணி முடிந்து தென்னகத்தின் முதல் பயணிகள் ரயில்வே தொடங்கியது.
பின்னர் பெங்களூர் -ஜோலார்பேட்டை இடையில் 149 கிலோமீட்டர் அகல பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள ஜாலர் என்ற ஆங்கிலேயர் ஜோலார்பேட்டையில் தங்கி ரயில்வே பணிகளை மேற்கொண்டார்.
அதன் பிறகு 1864 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை முதல் பெங்களூர் கண்டோன்மென்ட் வரை பணிகள் முடிந்து பெங்களூர் மெயின் ரயில் சேவை தொடங்கியது.
இந்த ரயில் நிலைய பணிகளை மேற்கொண்ட ஜாலர் என்ற ஆங்கிலேயரின் பெயரைக் கொண்டு ஜோலார்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.
ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய வானிலை தொலைநோக்கு நிலையம் காவலூரில் உள்ளது. இதனை தொடங்கி வைக்க அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் சென்னையில் இருந்து காவலூர் வர ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அடையாளமாக இருந்தது.
இத்தகைய சிறப்புமிக்க ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். தினமும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு முக்கிய மாநிலங்களை இணைக்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்து வருவதால், சென்னை, பெங்களூர், சென்னை ஆகிய மார்க்கங்களில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.
இதனால் மாதத்திற்கு கோடி கணக்கில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.
இவ்வாறு கோடிக்கணக்கில் வருவாயீட்டும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போதுமான கழிவறை வசதி, குடிநீர் வசதி, தங்கும் அறை, பயணிகள் நிழற்கூரை லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் பெருதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நாட்டிலுள்ள 508 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமிர்த பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் நடை மேம்பாலங்கள், லிப்ட்டுகள், எஸ்க்லேட்டர்கள், பார்க்கிங் வசதிகள், ஓய்வறைகள், கண்காணிப்பு கேமராக்கள், ஜெனரேட்டர்கள், பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, ரயில் நிலையத்திற்கு அதிக இருக்கைகள் அமைப்பது மற்றும் புதிய சாலைகள் அமைப்பது ஆகியவை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பாதை பயணிகள் ரயில் பாதை போன்றவை மாற்றம் செய்து நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதால் இன்னும் சில மாதங்களில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் நவீனமயமாக காட்சியளிக்கப்பட உள்ளது.
100க்கும் மேற்பட்ட பழைய குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணி புரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை மூலம் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளானது ரயில் நிலைய பகுதிகளில் இருந்து கிழக்கு மேற்கு என இரண்டு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டு அதில் தங்கி ரயில்வே ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
தற்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் சிதலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை ரயில்வே நிர்வாகம் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து அகற்றினர் வருகின்றனர்.
நகரத்தின் மையப் பகுதியில் 1000 ஏக்கர் ரயில்வே இடம் ஜோலார்பேட்டை நகர மைய பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் ரயில்வே துறை மூலம் இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்து ரயில் தளவாட உதறி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். வாழ்வாதாரம் பெறுவதோடு நகரமும் வளர்ச்சி பெறும்.
ரயில்வே அரசு அலுவலகங்கள் இடித்து அகற்றி புதிய கட்டிடங்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள துறை சார்ந்த ரயில்வே அரசு அலுவலக கட்டிடங்கள் தற்போது உள்ளதை இடித்து அகற்றப்பட்டு அனைத்து ரயில்வே துறை அலுவலகங்களும் ஒரு பகுதியாக அமைக்கப்பட உள்ளது. இதனால் தற்போது இயங்கி வரும் அனைத்து அலுவலக கட்டிடங்களும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இங்கிலாந்து மன்னர் பரிசளித்த எடை தராசுடன் நவீன தராசும் செயல்படும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே தளவாடங்களை எடை காண்பதற்கு இங்கிலாந்து மன்னர் ஒன்றரை டன் வரை அளவீடு செய்யும் எடை தராசை பரிசாக வழங்கினார். அந்த எடைத்தராசு தற்போதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதோடு அல்லாமல் தற்போது ரயில் நிலையம் நவீன மயமாக்கப்பட உள்ளதால் அதே ஒன்றரை டன் அளவு எடை மதிப்பீடு செய்யும் எலக்ட்ரானிக் தராசும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion