மேலும் அறிய
Advertisement
செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (45). தமிழக சிறப்புக் காவல் படை காவலராகச் சென்னையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு, சென்னை காவல்துறை டி.ஐ.ஜி. அலுவலக பணம் 6 லட்சத்தைக் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாகச் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது .
பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு பேரணாம்பட்டு அருகே இளம்பெண் ஒருவரைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று இவர் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் சசிதரன் .
இந்நிலையில் முன்னாள் காவலர் சசிதரன் பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்குத் தகவல் கிடைத்தது. அவர் வசம் ஒரு நாடு துப்பாக்கி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது. மேலும் அவரை கண்காணித்து நடவடிக்கைஎடுக்குமாறு பேரணாம்பட்டு காவல்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் பேரணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் ராஜன் பாபு தலைமையில் போலீசார் கண்காணித்தபோது செர்லப்பல்லி கிராமத்தில் ஏரிக்கானாறு பகுதியில் முன்னாள் காவலர் சசிதரன் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதைக் கண்டுபிடித்து அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சசிதரன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை அருகிலுள்ள பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து காவல்துறை அவரது வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் சசிதரன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சசிதரனைக் கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion