மேலும் அறிய
Advertisement
உள்ளாட்சி தேர்தல்: 2 கிராம் தங்கம், இலவச வீட்டுமனை-’வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் வேட்பாளர்’
ஜானகிராமனின் வாக்குறுதிகள் பொதுமக்களை ஆச்சரியத்தில் மட்டுமல்லாமல் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது
தமிழ் நாட்டில் புதியதாகப் பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். மேலும் வாக்குப் பதிவு செய்யப்படும் நாள் உள்ளிட்ட தேர்தல் அறிவிப்புகள் மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம், மாதனூர், கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 6 ஒன்றியங்களுக்கான வார்டு உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.
ஊரக தேர்தலுக்கான அறிவிப்புகளே இன்னும் வெளியாகாத நிலையில் ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அவரது கிராம மக்களைக் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளைத் துண்டுப் பிரசுரங்களாக மக்களிடம் விநியோகித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி ராமன் (35 ) ஆம்பூர் மற்றும் சுற்றவற்றப் பகுதிகளில் தேங்காய் வியாபாரம், மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை பெரியளவில் செய்து வருகிறார். 10 வருடத்திற்கும் மேலாக அதிமுக கட்சியில் பேர்ணாம்பட்டு அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராகப் பதவி வகித்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திமுக கட்சியில் இனைந்து அடிப்படை உறுப்பினராக உள்ளார். கடந்த 10 வருடங்களாகவே ஊராட்சி மன்ற தலைவராக வேண்டும் என்று கனவு கோட்டை கட்டி வந்த இவருக்குச் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தனது ஊராட்சி மன்ற தலைவர் ஆசையை மூட்டை கட்டி வைக்க முடியாமல் கட்சி சார்பற்ற பதவியான 'ஊராட்சி மன்ற தலைவர்' பதவிக்கு பொது சின்னத்தில் நிற்க முடிவு எடுத்துள்ளார் .
இதற்காகக் கிராம முக்கியஸ்தர்கள், கட்சித் தலைவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சமுதாய தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்று வருகிறார். இவர் மேற்கொள்ளும் பிரச்சாரத்தைக் காட்டிலும், இவர் தயார் செய்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. கிராம ஊராட்சியில் உள்ள பெண்கள் திருமணத்திற்குத் தாலிக்கு 2 கிராம் தங்கம், ஊரில் மாரியம்மனுக்குக் கோவில் கட்டித்தரப்படும், அனைத்து தெருவிலும் சிமெண்ட் சாலை, ஏழை மாணவர்களுக்கு படிப்புதவி, அரசு மற்றும் போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவி, கிராமத்தில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வு ஊதிய தொகை, 24 மணிநேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் மற்றும் கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்துத் தரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களை ஆச்சரியத்தில் மட்டுமல்லாமல் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion