மேலும் அறிய

வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

ஜவ்வாது மலையில் தொடர் மழை காரணமாக மிளகுசெடிகளுகக்கு வாடல் நோய் தாக்குதல் மிளகு உற்பத்தி சரிவு விவசாயிகள் வேதனைஇழப்பீடு வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை.!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் வாழும் மலைவாழ் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜவ்வாது மலையில் மிளகு உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை துறையினர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் இட்டனர். இதற்கு மிளகு செடிகள் 40% மானியத்துடன் வழங்கப்பட்டுது. நம்மியம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு 200 மிளகு நடும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

மிளகு செடிகள் உயரமாக படர்ந்து செல்வதற்கு மரங்கள் நடப்பட்டன. நடப்பட்ட ஆண்டில் இருந்து மூன்றாவது ஆண்டில் அறுவடைக்கு தயாராக இருக்கும். முதல் அறுவடையில் ஒரு மிளகு செடிக்கு 1 கிலோ வீதம் கிடைக்கும், அடுத்தடுத்த ஆண்டில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும்  25 ஆண்டில் ஒரு மிளகு செடியில் இருந்து 70 கிலோ முதல் 100 கிலோ வரையில் அறுவடை செய்யலாம். இந்த திட்டம் படிபடியாக விரிவு படுத்த பட்டு மலைவாழ் விவசாயிகளுக்கு தற்போது 250 ஏக்கர் பரப்பளவில்  மிளகு செடி வளர்க்கப்பட்டு வருகிறது. 

வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

ஜவ்வாதுமலையில் சென்ற ஆண்டு மிளகு முதல் அறுவடையில் 1500கிலோ மிளகு அறுவடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருவம் மாறி பெய்த மழையால் மிளகு விளைச்சல் பாதித்துள்ளது, தொடர்மழையால் மிளகு செடிகளுக்கு வாடல் நோய் தாக்குதலில்  இருந்து மிளகு செடிகளை பாதுக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, தோட்டக்கலைதுறை சார்ப்பாக கூறப்படுகிறது. 

இது குறித்து மிளகு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிடம் கேட்டபோது, 

‛‛எங்கள் மலையில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள்  கூலி வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு மிளகு அறுவடைக்கு செல்வோம் அங்கு சென்ற நாங்கள் மிளகு செடிகள் எப்படி வளர்ப்பது, பராமரிப்பு செய்வது போன்றவற்றை அறிந்து கொண்டோம் அதன் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் அதிகாரிகள் வருகை தந்து  இதற்கு மேல் நீங்கள் வேலைக்காக வெளியில் செல்ல வேண்டாம்.  நாங்கள் உங்கள் விளைநிலங்களில் விவாசாயம் செய்வதற்கு மிளகு செடிகள் மானியத்தில் தருகிறோம், அதனை வைத்து பயிற் செய்து உங்கள் வாழ்வாதாரம் உயர்த்தி கொள்ளாம் என்று கூறினர். 

வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

அதன் அடிப்படையில் எங்கள் விலைநிலத்தில் 1 ஏக்கரில் மிளகு செடி நட்டு பராமரித்து வந்தோம் சென்ற ஆண்டு மிளகு 100 கிலோ உற்பத்தி செய்து விற்பனை செய்தோம் ,தற்போது எங்களுடைய மிளகு செடிகளுக்கு திடீரென நோய் தாக்குதல் ஏற்பட்டு ஒவ்வொரு மிளகு செடியாக பட்டுபோய்விடுகின்றன.  இந்த மிளகு செடிகளை தாக்கும் நோய்களை  கட்டுப்படுத்த தோட்டகலை சார்பில் கையாள வேண்டும். வாடல் நோய் தாக்குதலால் மிளகு விளைச்சல் குறைந்துள்ளது. நாங்கள் முதல் முறையாக மிளகு சாகுபடி செய்து உள்ளோம்.

எனவே நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடிகளை பாதுக்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தோட்டகலைத்துறை அதிகாரிகள், எங்களுக்கு தெரிவித்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டு எங்களுக்கு  வாடல் நோய் தாக்குதலால் மிளகு உற்பதியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு மிளகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

தோட்டக்கலை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழையால் மிளகு செடிகளுக்கு வாடல் நோயால் பாதித்து  அழுகியுள்ளது மிளகு செடிகள். எதிர்காலத்தில் நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு மிளகு 350முதல் 400 வரை விலைக்கு போக்கின்றது எனவும் இந்த மிளகுகளை மகளிர் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்,’’ என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget