(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலையில் 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதி - துணை சபாநாயகர் பிச்சாண்டி பேட்டி
பண்டிகை காலங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா .முருகேஷ் தலைமையில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் அதிகரித்துவரும் ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை வருடகாலமாக மலை, காடு, மழை என்று பாராமல் சென்று கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்திய சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும். நமது மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் மூலம் நமது மாவட்டம் மாநிலத்தில் 3வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மகப்பேறு மற்றும் பசீலன் குழந்தைகள் இறப்பு நமது மாவட்டத்தில் அதிகமாக உள்ளது என்றும், இதற்கு காரணம் படிக்காதவர்களும், சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கக் கூடிய அவல நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை இறப்பு நமது மாவட்டத்தில் விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த பெண்மணி ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் பஞ்சாயத்து தலைவராக உள்ள ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கொரோனா பரிசோதனை செய்ய முன்வராமல் பல தவறான செயல்களில் ஈடுப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்வதற்கு காவல்துறையினர்,அனுப்பிய பிறகே பரிசோதனை செய்வதற்கு அனுமதித்தார். இதுபோன்று இருந்தால் எப்படி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
பச்சிலை குழந்தைகளின் இறப்பை சதவீதத்தை குறைக்கும் வகையில் உலக வங்கியின் நிதியின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 12ஆம் தேதி அன்று காங்கோவில் இருந்து ஆரணி அடுத்த உள்ள பையூர்க்கு கிராமத்துக்கு வந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்த நிலையில், அவருடன் சார்ந்த 108 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உடன் அவர்களைத் தனிமைப்படுத்தப் பட்டதாகவும், மேலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுப்படுத்தி உள்ளதாகவும் இதனை சுகாதாரத்துறை செயலாளர் பாராட்டியதாக அவர் தெரிவித்தார். ஓமிக்ரான் வராமலிருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளதாகவும், பண்டிகை காலங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தெரிவித்தார்,
காங்கோ நாட்டில் இருந்த பெண்மணிக்கு ஓமிக்ரான் ஏற்படும் நிலையில் அவரிடமிருந்து முதன்மை தொடர்பில் இருந்த அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் அதில் பெண்மணியின் தம்பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும். அவரின் தந்தைக்கு ஓமிக்ரான் வைரஸ் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பேட்டியில் தெரிவித்தார். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும். மேலும் தமிழக அளவில் திருவண்ணாமலை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வர்களின் எண்ணிக்கையில் 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் இதை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் துணை சபாநாயகர் தெரிவித்தார், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட இரண்டு பேரும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் ஆனாலும் அவர்கள் நலமுடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டியில் தெரிவித்தார்.