தமிழகத்தில் 10 ஆண்டுகளில் மது, கஞ்சாவால் மனித வளமே இல்லாமல் போய்விடும் - அன்புமணி வேதனை
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, என்.டி.சண்முகம், சமூக நீதிப்பேரவை வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் பல்வேறு சமுதாய தலைவர்களும் இதில் கலந்துகொண்டு பேசினார்கள். இதில், அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் அதன் அவசியங்கள் குறித்தும் விரிவாக பேசினார் இதில் திரளான பாமகவினர் கலந்துகொண்டனர்.
பின்னர் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் தான் தமிழகத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பல அழுத்தம் கொடுத்தும் முதல்வரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. முதல்வர் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தவறான ஒரு கருத்தை சொல்கிறார். 2000 ஆண்டுகாலமாக சாதியை வைத்து தான் அடக்குமுறை... இட ஒதுக்கீடு எல்லாம் நடக்கிறது. அதிகாரம் இருக்கு ஆனால் முதல்வருக்கு மனம் இல்லை.
வெறும் வசனம் மட்டும் தான் முதல்வர் பேசுகிறார். சமூக நீதியை பற்றி பேச உங்களுக்கு அருகதை கிடையாது, தகுதி கிடையாது சாதாரண ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு கணக்கெடுப்பு எடுக்க அதிகாரம் இருக்கும் போது முதல்வருக்கு இல்லையா? அவ்வாறு சாதி வாரி கணக்கெடுப்பை நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடுக்கவில்லை என்றால் பாமக தலைமையில் நிச்சயம் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். மேலும் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் நிறைய கிடைத்துள்ளது, கம்பெனிகள் திறப்பது என்பது முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. பொங்கலுக்கு குடும்ப கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்குகிறார்கள் ஆனால் மதுக்கடைகள் மூலம் அந்த பணத்தை அப்படியே வாங்கிகொள்கின்றனர். எனவே பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு மது கடைகளை தமிழக அரசு மூடுமா தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சணை நியாயமானது 19-ஆம் தேதி பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் தொழிலாளர் பக்கம் தான் பாமக இருக்கும் திமுக எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள், நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் தான் அறிவிப்போம் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை அது அரசியல் அல்ல ,முதல்வர் சமூக நீதி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படால் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்குமான ஒதுக்கீடு உயரும், பாலாற்றில் பருவத்தில் தான் தண்ணீர் வரும் வேலூரை சேர்ந்தவர் நீர்வளத்துறை அமைச்சர் எத்தனை தடுப்பணையை கட்டி இருக்கிறார்? வரும் நாட்களில் கடும் வறட்சியை சந்திக்க இருக்கிறோம். தமிழகத்தில் பத்தாண்டுகளில் மது கஞ்சாவால் மனித வளமே இல்லாமல் போய்விடும் எந்த வேலைக்கு தமிழர்கள் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு பேசினார்.