watch video: செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமரின் புகைப்படத்தை அழித்து ‘கோ பேக் மோடி’ வாசகம்
பாஜகவின் செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டிருந்த மோடியின் புகைப்படத்தை கருப்பு ஸ்பிரே கொண்டு அழித்தனர்.
திருவண்ணாமலையில் வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அழித்து ‘கோ பேக் மோடி’ என்ற வாசகம் எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே ஒலிம்பியாட் குறித்த விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை அழித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் குறித்து தமிழகம் முழுவதும் விளம்பரப் பதாகைகளை தமிழக அரசு ஒட்டி வந்துள்ளது. அந்த வகையில் சென்னை முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ள பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் மோடியின் படம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி விளம்பர பதாகைகளில் மோடியின் புகைப்படத்தை ஒட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
திருவண்ணாமலையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அழித்து கோ பேக் மோடி என்ற வாசகம் எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்@abpnadu @SRajaJourno @annamalai_k @CMOTamilnadu
— Vinoth (@Vinoth05503970) July 29, 2022
Videolink;https://t.co/aqq8sIHWU7 pic.twitter.com/dbjZgCA9jO
இந்நிலையில், பாஜகவின் செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டிருந்த மோடியின் புகைப்படத்தை கருப்பு ஸ்பிரே கொண்டு அழித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் காவல்துறையினர் மோடியின் புகைப்படத்தை அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில் இதேபோன்று திருவண்ணாமலை நகராட்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதும் வகையில் திருவண்ணாமலை- வேலூர்- கிரிவலப்பாதை செல்லும் சாலையின் நடுவில் செஸ் போர்டினை வரையப்பட்டு இருந்தது,
மேலும் அதன் அருகே தமிழக அரசு சார்பில் அங்கு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தினை திருவண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ராகவன் என்ற இளைஞர் மார்க்கர் ஸ்கெட்ச் மூலம் அவரின் உருவ படத்தினை அழித்தும், அதன் பின்னர் கோ பேக் மோடி என்ற வாசகத்தையும் எழுதி உள்ளார். மேலும் இவர் செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அதே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தினை வண்ணம் பூச்சு மூலம் புகைப்படத்தினை அழித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட விழிப்புணர்வு பேனரில் இடம் பெற்று இருந்த பாரத பிரதமர் மோடியின் படத்தை அழித்த நபர்கள் யார் என்றும் அந்த வீடியோ வைத்து யார் அவர்கள் என்று ஆய்வு நடத்தி வருகிறோம், கண்டு பிடிக்கப்பட்ட உடனே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்