5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - திருவண்ணாமலையில் 80020 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன...!
’’ஒரே நாளில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன'’
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகளை மத்திய மாநில அரசுக்கு ஊக்குவித்து வருகின்றன. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி பெற்றுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் ஞாயிற்று கிழமைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் குலுக்கல் குறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
முந்திரி தொழிற்சாலை கொலை: நீதிமன்றத்தில் சரணடைந்தார் கடலூர் திமுக எம்பி ரமேஷ்!
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை முதலாவது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து ஆயிரத்து 325 நபர்களுக்கும், இரண்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 77 ஆயிரத்து 85 நபர்களும். மூன்றாவது கட்ட முகாமில் 75 ஆயிரத்து 896 நபர்களும், நான்காம் கட்ட முகாமில் 57 ஆயிரத்து 225 நபர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று நடந்த 5வது கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாமானது மாவட்டம் முழுவதும் உள்ள 1,075 மையங்களில் நடைபெற்றது. காலை 7 மணி துவங்கி இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடத்தப்பட்ட்ட நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் குளறுபடி - புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்...!
‛காரை ஏற்றி நசுக்க நாம் அரசியலுக்கு வர வில்லை’ -உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆவேசம்!
இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மின்சார பிரச்சனைக்கு காரணமான நிலக்கரி: இந்த 10 தெரிந்தால் மொத்தமும் புரியும்!