மேலும் அறிய

முந்திரி தொழிற்சாலை கொலை: நீதிமன்றத்தில் சரணடைந்தார் கடலூர் திமுக எம்பி ரமேஷ்!

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலை ஊழியர்கள்  நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலை ஊழியர்கள்  நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின் கோவிந்தராஜின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும், மேலும் கோவிந்தராஜின் உடல் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர், பின் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இறந்த கோவிந்தராஜின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  நான்கு  பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது.

அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டார், அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக கோவிந்தராஜ் அவர்களின் மகன் மற்றும் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நந்தகுமார், சிறப்பு துணை ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதில் காடாம்புலியூர் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, அதற்கு பின் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இறந்த கோவிந்தராஜ் அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் காடம்புலியூர் காவல் நிலையத்தில் காயங்களுடன் இருக்கும் கோவிந்தராஜின் புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடலூர் எம்பி ரமேஷ் அவர்களின் முந்திரி தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முந்திரி தொழிற்சாலை கொலை: நீதிமன்றத்தில் சரணடைந்தார் கடலூர் திமுக எம்பி ரமேஷ்!

விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது 302 கொலை, 201 தடயம் மறைப்பது, 149 சதிதிட்டம், 120b கூட்டு சதிதிட்டம், 147 -5 பேருக்கு மேல் கூட்டாக சேர்நது தாக்குதல், 148-சம்பவத்தில் ஈடுபடுவதும் என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷை தவிர்த்து மற்ற 5 பேரையும் நேற்று காலை கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு 5 பேரிடமும் நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் நடராஜன் என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  பின் தற்பொழுது அவரின் உடல்நிலை சீராகிய நிலையில்  5 பேரும் கைது செய்யப்பட்டு  நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர் பின் ரிமாண்ட் செய்து  கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கடலூர் எம்பியை கைது செய்ய சிறிதும் தாமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget