மேலும் அறிய

World chess day: திருச்சியில் உற்சாகமாக செஸ் விளையாடிய அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

உலக செஸ் தினத்தை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செஸ் விளையாடினார்கள்.

செஸ் (சதுரங்கம்) என்பது நம்முடைய பழமையான விளையாட்டுகளில் ஒன்றாகும்.  கி.பி.6 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவில் செஸ் குறித்த எழுத்துப்பூர்வமான வடிவம் பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில், போர்க்களத்தில் எதிரிகளை சாய்க்க தேவையான திட்டங்களை வகுக்கும் கருவியாகவும் செஸ் பயன்பட்டது. பின் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் ஆனது. கி.பி., 17 வது நுாற்றாண்டில் நவீன அளவிலான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், அனைத்து வயது மக்களாலும் விளையாடப்படுகிறது. மேலும், 1800களில் செஸ் விளையாட்டு அபரீதமான வளர்ச்சியை கண்டது. முன்னதாக, செஸ் போட்டி சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்று வந்தது. முஹல் முறையாக 19ஆம் நூற்றாண்டில் தான்  செஸ் போட்டிக்கான நேரம் ஒழுங்குமுறை வந்தது. ஸ்டெயினிட்ஸ் என்பவர் 1886ஆம் ஆண்டு முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதையடுத்து, 1920களில் நவீன செஸ் போட்டியின் வளர்ச்சி நன்றாக அமைந்தது. இதன் காரணமாக  1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக  இன்று வரை கொண்டாப்பட்டு வருகிறது.

World chess day: திருச்சியில் உற்சாகமாக செஸ் விளையாடிய அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்காக பிரத்யேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செஸ் போட்டி விளையாடுவதால் மாணவர்களின் அறிவு திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், அதனுடன் சேர்ந்து கல்வித்திறன் அதிகரிக்க ஒரு முக்கிய விளையாட்டாக இது கருதப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர்கள் அடுத்த மாவட்ட அளவிலான, மாநில அளவிலான நடைபெறக்கூடிய செஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Embed widget