மேலும் அறிய

தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட வாலிபர் தவித்து வருகிறார். அவரை மீட்க கோரி மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 31). எம்.பி.ஏ. பட்டதாரியான இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 3 வயதில் சாய் துருவேஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வக்குமார் சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினார். இதற்கிடையில் மகன் சாய் துருவேஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இதில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் அதிகம் செலவானது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதிக்க செல்வக்குமார் எண்ணினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒரு ஏஜெண்டு மூலம் துபாய் நாட்டில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலை இருப்பதும், மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிந்தது. இந்த தகவல் மூலம் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கட்டிய பின் கடந்த மே மாதம் 31-ந் தேதி செல்வக்குமார் துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அவரை அந்நிறுவன ஏஜெண்டுகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் படகு மூலம் மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கணினியில் முறைகேடான வேலையை பார்க்க கூறியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வக்குமாரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த கும்பலிடம் செல்வக்குமார் கெஞ்சினார்.


தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதையடுத்து அவரிடம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். மேலும் அதனை உடனடியாக கொடுத்தால் விடுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் செல்வக்குமார் தனது மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டு பேசி நிலைமையை எடுத்துக்கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன ரம்யா செய்வதறியாமல் திகைத்து நகைகளை அடகு வைத்தும், கடனை வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் பணம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்ற பின் செல்வக்குமாரை படகு மூலம் தாய்லாந்துக்கு அழைத்து சென்று விடுவித்துள்ளனர். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த 7 பேரும் பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து அவர்களை பாங்காக் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதற்கிடையில் ரம்யாவிடம் செல்வக்குமார் அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் வீடியோ அழைப்பில் பேசியிருக்கிறார். சமீபத்திலும் அவர் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தனது கணவரை மீட்க கோரி ரம்யா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் அங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வப்போது வீடியோ காலில் பேசுவார். அவருக்கும் எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்குள்ள அரசா? அல்லது வேலைக்கு அழைத்து சென்ற தனியார் நிறுவனத்தினரா? அடைத்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் அங்கிருந்து 13 பேர் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதுபோல எனது கணவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் எனது கணவருக்கு ஏற்பட்ட கொடுமையின் காரணமாக அவர்கள் கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இருப்பினும் 2 மாதங்களுக்கு மேல் ஆனதால் எங்களுக்கு பயமாக உள்ளது. எனது கணவர் அங்கு எப்படி இருக்கிறாரோ? அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் மல்க கூறினார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget