மேலும் அறிய

வைகுண்ட ஏகாதேசி: திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

''ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது''

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. நேற்று இன்றிரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகியது. மேலும் இரவு 9 முதல் 9.30 மணி வரை அமுது செய்தலும், 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனம், 10.30 முதல் 11 மணி வரை திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம், 11.30 வரை தீர்த்த கோஷ்டி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. இன்று பகல்பத்து திருமொழி திருநாள் தொடங்குகியது. காலை 7.30 மணிக்கு முத்தங்கி சேவையில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் புறப்பாடு நடக்கிறது. 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் அடைகிறார்.

வைகுண்ட ஏகாதேசி: திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

காலை 9 மணி முதல் 1 மணிவரையும், மாலை 4 முதல் 5.30 மணிவரையும் பொதுஜன சேவையுடன் அரையர் சேவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். தொடர்ந்து பகல்பத்து 10 நாட்களும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் காட்சி அளிப்பார். பகல் பத்து உற்சவத்தையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ஆம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 20ம் தேதி திருக்கைத்தல சேவையும், 21ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் நடைபெறும்.  23ஆம் தேதி தீர்த்தவாரி,  24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள் மணல்வெளியில் பக்தர்கள் வசதிக்காக தகரபந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதேசி: திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகையில் விழா அமாவாசை, பவுர்ணமி துவங்கியதில் இருந்து 11ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி நம்பெருமாள் அருளியதாக ஐதீகங்கள் கூறுகின்றன. அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தது. இதை எப்படி  கொண்டாடுவது என கேள்வி வந்த போது, அப்போது  மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுண்ட ஏகாதசி திருவிழா கார்த்திகையில் வந்தது. அதேபோல் 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget