மேலும் அறிய

கலப்பு திருமணம் செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்ட 20 குடும்பங்கள்! ஆண்டுகளை கடந்தும் தொடரும் கொடுமை!

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ததால் டி.ஈச்சம்பட்டி கிராமத்தில் 20க்கும் அதிகமான குடும்பங்கள் ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பஞ்சீலி ஊராட்சிக்குட்பட்டது டி.ஈச்சம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம். இது தொடர்பாக அந்த கிராம மக்கள்  சவுந்தரராஜன் (67) கூறுகையில்,  ‛‛டி.ஈச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை சேர்ந்த நான், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். மேல்நிலைக் கல்வி பயிலும் பேரன்கள் எனக்கு உள்ளனர். ஆனால், திருமணம் செய்த நாள் முதல் என்னையும், என் குடும்பத்தினரையும் ஊரில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளாக ஊரில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நிகழும் சுக துக்க நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றில் நாங்கள் கலந்துகொள்ள முடியவில்லை. எங்கள் வீட்டு சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்பவர்களையும் ஊரில் இருந்து தள்ளிவைத்து விடுவதால் மன வேதனையாக உள்ளது. இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.


கலப்பு திருமணம் செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்ட 20 குடும்பங்கள்! ஆண்டுகளை கடந்தும் தொடரும் கொடுமை!

இதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்ட  தம்பதிகள் பாஸ்கரன்- சீதாலட்சுமி, ரங்கநாதன்- காவியா, கருணாநிதி- அஞ்சலி தேவி, பிரபு- மேனகா ஆகியோர் கூறியது எங்கள் ஊரில் எங்களைப் போல் கலப்பு மணம் புரிந்த 20க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. கலப்பு திருமணம் செய்ததற்காக ஊர் முக்கியஸ்தர்கள் எங்களை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். கலப்பு மணம் புரிந்த குடும்பங்களுடன் பேசுவது உட்பட எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஊர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.மேலும் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. வழக்கமான நேரங்களிலும் கோயிலில் பிறருடன் இணைந்து வழிபட முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும்போது கடையில் சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. எங்களுடன் எங்கள் பெற்றோர் பேசுவது தெரியவந்தால் அவர்களையும் ஒதுக்கிவைத்து விடுகின்றனர்.குடிநீர் வசதியோ, அரசின் சலுகைகளோ எங்களுக்கு வழங்குவதில்லை. வீட்டுக்கு வரி ரசீது கேட்டால், ஊரை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர். இந்த மன உளைச்சல் காரணமாக கலப்பு மணம் புரிந்த பலரும் பல ஆண்டுகளாக வெளியூர்களில் சென்று வசித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


கலப்பு திருமணம் செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்ட 20 குடும்பங்கள்! ஆண்டுகளை கடந்தும் தொடரும் கொடுமை!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற தீண்டாமை ஒழிப்பு சம்பவம் இந்த கிராமத்தில் நடந்து வருவதாகவும் ,பல்வேறு கட்டங்களாக புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்றும் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் தீண்டாமை ஒழிப்பு குற்றமா என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.தன்னுடைய உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், பெற்ற தாய், தந்தையை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக வெளியூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம், மனவேதனையை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பலமுறை காவல் துறையிடம் புகார் அளிக்க சென்றபோது ஊரில் உள்ள முக்கிய நபர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார்கள், இதையெல்லாம் தாண்டி தற்போது புகார் அளித்துள்ளோம் என்றனர்.மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்டால் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக போராடிய திராவிட கழகம் எங்களுடைய கிராமத்திற்கு ஒரு விடியலை ஏற்படுத்தி தருமா என்ற எதிர்பார்ப்புடன் கிராம மக்கள்.

தலைப்பு செய்திகள்

GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget