மேலும் அறிய
Advertisement
Trichy: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரிய இக்கோவில் வருவாயில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள் பாலித்து வரும் அம்பாளின் அழகே தெய்வீகமானது. எட்டு கைகளுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை கண்டால் மனம் அமைதி அடையும் என்பர். மேலும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இக்கோவில் நிதியில் இருந்து வாகன நிறுத்துமிடம், பல்வேறு வசதிகளுடன் கூடிய வரிசை வளாகம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வரிசை வளாகத்தில் கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள், காத்திருக்கும் கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், எஸ். எஸ். தடுப்புகள், மின்விளக்குகள், மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என 200-க்கும் மேற்பட்ட கழிவறைகள், பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சுமார் ஒரு மீட்டர் அகலம் உள்ள வரிசை வளாகத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்பவர்களால் வரிசையில் வரும் பக்தர்கள் அவதி அடைகின்றனர். எனவே, அதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் கோவிலுக்குள் செல்ல வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் அம்மனை தரிசனம் செய்ய கிழக்கு கோபுரம், வடக்கு மற்றும் தெற்கு வாசல் வழியாக செல்ல வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு அன்னதான கூடத்திற்கு செல்லும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக செல்ல வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்ல பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion