மேலும் அறிய

திருச்சியில் மக்களை கவரும் வகையில் 2 அடுக்குகளுடன் நடைபயிற்சி ரவுண்டானா

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யக்கொண்டான் வாய்க்காலின் மீது 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் அழகிய ரவுண்டானா அமைக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகர் ,நீதிமன்றம் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து தென்னூர் அண்ணாநகர் பாலம் வரை 780 மீட்டர் தொலைவுக்கு நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பேவர் பிளாக் மூலம் இரு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழி நெடுகிலும், மரங்கள் நன்கு வளர்த்து பசுமையாக இருப்பதாலும், ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் இருப்பதாலும், திறந்தவெளியில் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாலும் நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நடைபாதைக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யக்கொண்டானின் மறுகரையில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தையொட்டிய பகுதியில் ரூ.1.90 கோடியில் கடந்தாண்டு மேலும் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்களை கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளை சிலை, மின் அலங்காரங்களுடன் கூடிய மீன் வடிவலான நீரூற்று, உய்யக்கொண்டான் வாய்க்காலில் படித்துஐற, கவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், அமர்ந்து ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டது.


திருச்சியில் மக்களை கவரும் வகையில் 2 அடுக்குகளுடன் நடைபயிற்சி ரவுண்டானா

இதனை தொடர்ந்து இந்த 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் உய்யக்கொண்டான் வாய்க்காலின் மீது அழகிய ரவுண்டானா அமைக்குமாறு திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கட்டிட எழில்கலை பொறியாளர்கள் உதவியுடன் தற்போது அதற்கான பூர்வாங்க பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து திருச்சி மாநகராட்சி  மேயர் அன்பழகன் கூறும்போது, "எம்.ஜி.ஆர். சிலை அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் மீது தற்போதுள்ள பாலத்தில் இருந்து சுமார்100 மீ தொலைவில் கிழக்கு பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இந்த ரவுண்டானாவின் மையப்பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், வட்டவடிவிலான படிக்கட்டுகள், சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நீருக்கு மேலே 2 அடுக்கு நடைபயிற்சி தளங்களுடன் அமைக்கப்படும் இந்த அழகிய ரவுண்டானா நிச்சயம் பொதுமக்களை கவரும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் நிர்வாக ஒப்புதலுக்கா அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும்" என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget