Trichy Power Shutdown: மாவு அரைப்பதோ, அயனிங் செய்வதோ உடனே செய்துக்கோங்க.. திருச்சி மக்களே எதுக்குனா? இதுக்குதான்
Trichy power cut: கடந்த சில வாரங்களாகவே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு இல்லை. காரணம் மாணவர்கள் தேர்வு எழுத தடை ஏற்படக்கூடாது என்பதால்.

திருச்சி: திருச்சி மக்களே நாளைக்கு வியர்வையில் நனைய போறீங்க போங்க. கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மின்விசிறி, ஏ.சி இல்லாமல் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலைதான் உள்ளன. இந்த நிலையில்தான் திருச்சி மக்களே நாளை உங்களுக்கு வியர்க்க போகிறது.
ஆமாங்க. திருச்சியில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு இல்லை. காரணம் மாணவர்கள் தேர்வு எழுத தடை ஏற்படக்கூடாது என்பதால் மின் தடை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரக்கொள்ளை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருதாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, பிவிஎஸ் கோயில், கந்தன் மின்னப்பன் தெரு, லிங்கம் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள நகர், சந்தோஷ் கார்டன், மருதண்டாகுறிச்சி, மல்லிம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீரா தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை.
மேலும் கூடலூர், முத்தரசநல்லூர், பலூர், அல்லூர், ஜுயபுரம் , திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடியேற்று நிலையம், பொன்மலை குடியேற்றம், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையங்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர் அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், திருவானைக்கோவில், அம்மா மண்டபம் மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை 19ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதனால திருச்சி மக்களே நாளைக்கு மின்தடை இருப்பதால் மாவு அரைப்பதோ, அயனிங் செய்வதோ உடனே செய்துக்கோங்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

