மேலும் அறிய

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 2 பேர் கைது

தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 வாலிபர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் காந்திரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி செயல்பட்டு வருகிறது. இங்கு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 5 பட்டதாரி வாலிபர்கள் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் என 8 பேரிடம் கடந்த 10-ந் தேதி ரூ.18 லட்சம் பெற்று கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கூறி ஸ்ரீரங்கம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் கன்சல்டன்சி உரிமையாளர் மீனாட்சி (வயது 28), மேலாளர் பாலகிருஷ்ணன் (32) ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கன்சல்டன்சி நடத்தி வந்ததும், இதுவரை சுமார் 250 பேரை போலந்து, ருமேனியா, செர்பியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் டெல்லியில் உள்ள ரீகன் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் மூலம் ஆட்களை வேலைக்கு அனுப்பி வருவதும், இவர்களுக்கு சென்னை, மும்பை, மதுரை ஆகிய இடங்களில் சப்-ஏஜெண்டுகள் இருப்பதும் தெரியவந்தது. போலந்து மற்றும் ருமேனியா நாடுகளில் உள்ள நிறுவனத்தின் மூலம் போலி பணி நியமன ஆணை பெற்று வருவதும், தற்சமயம் 60 முதல் 70 பேர் வரை இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 2 பேர் கைது

மேலும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை மலேசியாவில் உள்ள போலந்து நாட்டின் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. இவர்கள் வேலை கேட்டு வரும் நபர்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை பெற்று கொண்டும், கமிஷன் தொகையாக ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை எடுத்து கொண்டும், விமான கட்டணத்துக்கும், விசா பெறுவதற்கும் செலவு செய்தது போக மீதமுள்ள தொகையையும் இவர்களே வைத்து கொள்வதும் தெரியவந்தது. இதையடுத்து தனியார் கன்சல்டன்சி உரிமையாளர் மீனாட்சி, மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார் 48 மணி நேரத்துக்குள் அவர்களை கைது செய்தனர். மேலும், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget