Independence Day: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் பொருட்டு ஆண்டு தோறும் திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்வது வழக்கம். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், வணிகவளாகம் , வாகனங்கள் சோதனை செய்வது வழக்கம். ஏன் என்றால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க ஆண்டு தோறும் காவல்துறையினர் சோதனை நடத்துவார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, இந்திய நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதனை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அதேபோல் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு எனப் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்திய நாட்டின் 76- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.@abpnadu #trichydistric #railwayjunction pic.twitter.com/Jn6XV66v0o
— Dheepan M R (@mrdheepan) August 8, 2023
மேலும், நாள்தோறும் பல்லாயிர கணக்கான பயணிகள் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 15ஆம் தேதி , நாட்டின் 76 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில்வே காவலர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். இதில் பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சுரங்க பாதை,வாகன நிறுத்தும் இடம், ரயில்வே நடைபாதை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.