மேலும் அறிய

கத்திரி வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்த கனமழை... வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. மே 28-ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில் முதல் நாளே திருச்சி மாநகரில் மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

திருச்சி: கத்திரி வெயில் தொடங்க... அன்று மாலையே ஹாய் என்று சூறைக்காற்று சுழற்றி அடிக்க திருச்சி மக்களே உங்களை குளிர்விக்க நானும் வரேன் என கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்றும் திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக வெக்கையில் வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு குளுகுளுவென்று குளிர்ந்த காற்று தாலாட்டு பாட்டு போல் சிலிர்க்க வைத்து விட்டது.

திருச்சியில் நேற்றுமுன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் நகரம் இருளில் மூழ்கியது. இதனால் வந்தே பாரத் ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் நேற்றுமுன்தினம் கத்திரி வெயில் தொடங்கியது. ஆரம்பத்திலேயே அசால்ட் காட்டி மக்களை அலற விட்டது. தார்சாலைகளில் கானல் நீர் பளபளவென்று பரவலாக காணப்பட்டது. இதனால் சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிக்கிடக்கும் சாலைகள் அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட் ஆன் நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி அந்தோ பரிதாபமாக காணப்பட்டது.


கத்திரி வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்த கனமழை... வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்

பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம் போன்றவற்றை வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. மே 28-ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில் முதல் நாளே திருச்சி மாநகரில் மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஆரம்பித்த அன்று மாலையே சூறைக்காற்றுடன் துவங்கிய ஆலங்கட்டி மழை திருச்சி மாநகரை குளிர்வித்தது.

அக்னி நட்சத்திர தாக்கத்தை தகர்க்கும் வகையில் அன்று மாலையே பலத்த சூறைக்காற்றுடன் சுழன்று அடிக்க பட்படார் என்று பெரிய பெரிய துளிகளாக விழ ஆரம்பித்த மழை போக... போக வேகம் காட்டி கனமழையாக பெய்தது. திருச்சியில் கடந்த ஒரு மாதமாக வெளுத்தெடுத்து வந்த வெப்பம் இந்த மழையின் காரணமாக புஸ்ஸென்று அடங்கியது.

திருச்சி ஜங்ஷன், பொன்மலை, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் என பல்வேறு பகுதிகளிலும் கடும் வெப்பத்தால் வாடி வதங்கிய பொதுமக்களும் திடீர் ஆலங்கட்டி மழையால் உற்சாகத்தில் திளைத்தனர். இந்த மகிழ்ச்சி நீடித்த நிலையில், மின்வாரியம் அதற்கு வேட்டு வைத்தது. திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மாநகரமே இருளில் மூழ்கியது. திருச்சியில் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் பெய்த மழையினால் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே மின் நிலையத்தில் இடி விழுந்ததால் ரயில் சேவையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பெங்களூரில் இருந்து மதுரை சென்ற வந்தே பாரத் ரயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருச்சி பாலக்கரை ரயில் நிலையத்தில் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பலருக்கு அப்பகுதியினர் உதவி செய்து ரயிலில் இருந்து தத்தம் இருப்பிடங்களுக்கு தனியார் வாகனங்கள் மூலம் சென்றனர்.

பின்னர், டீசல் இன்ஜினை வைத்து வந்தே பாரத் ரயில் திருச்சி ஜங்ஷன் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டது. பின்னர் ரயில் பயணிக்கும் தடத்திற்கு மின்விநியாகும் வழங்கப்பட்டதை அடுத்து ரயில் சேவை சீரானது. இதேபோல் நேற்றும் திருச்சியின் புறநகர் பகுதிகள், சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் வெக்கை தணிந்து மக்கள் குளிர்ந்த காற்றால் மனம் மகிழ்ந்தனர்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget