மேலும் அறிய

திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனின் உடல் தகனம்

திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவு உடல் தகனம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், சர்க்கார் பாளையம் பனைய குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் (வயது 30). ரவுடியான இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்பட 53 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொம்பனை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் சமயபுரம் அருகே சனமங்கலம் காட்டுப்பகுதிகள் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்றனர்.

அப்போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கொம்பனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொம்பன் ஜெகன் பலியானார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கொம்பன் ஜெகனின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் விசாரணை நடத்தினர். பின்னர் கொம்பன் ஜெகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இரவு 9:45 மணி அளவில் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனின் உடல் தகனம்

திருச்சி அரசு மருத்துவமனையில் ரவுடி கொம்பன் ஜெகன் உடலை பெற்று உறவினர்கள் திடீர் பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவுடி ஜெகன் நண்பர்கள் கூச்சலிட்டனர் அதே சமயம் அவருடைய உறவினர்களும் கூச்சல் சத்தம் இட்டதால் காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும் ரவுடி ஜெகன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 30 நிமிடம் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு திருச்சி சர்க்கார் பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. அங்கு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீசாரின் பலத்த பாதுகாப்போடு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே ஜெகனின் தாயார் சரஸ்வதி கூறும்போது, எனது மகன் கடந்த 2 ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக  ஆஜராகி  வந்தான். 

இருப்பினும் போலீசார் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர். அவனை ரவுடியாக்கியது போலீசார் தான். அவன் தவறே செய்திருந்தாலும் அவனுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று கொடுத்திருக்க வேண்டும். போலி என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றுவிட்டனர். இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். அதேபோன்று கொம்பனின் மனைவி ஆர்த்திகா மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கள்ளர் முன்னேற்ற சங்கமும் நீதி விசாரணை கோரி உள்ளது.

தலைப்பு செய்திகள்

அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
Trichy Power Cut: திருச்சியில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - இதோ முழு லிஸ்ட்
திருச்சியில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - இதோ முழு லிஸ்ட்
திருச்சியில் ₹400 கோடி சாலைத் திட்டம் முடக்கம்! டெண்டர் விடுவதில் தாமதம் ஏன்?
திருச்சியில் ₹400 கோடி சாலைத் திட்டம் முடக்கம்! டெண்டர் விடுவதில் தாமதம் ஏன்?
திருச்சியில் பிரம்மாண்ட தளவாடப் பூங்கா!  ஆரம்பக்கட்ட பணிகளை தீவிரப்படுத்திய டிட்கோ
திருச்சியில் பிரம்மாண்ட தளவாடப் பூங்கா!  ஆரம்பக்கட்ட பணிகளை தீவிரப்படுத்திய டிட்கோ

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget