![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - அதிகாரிகளுக் திருச்சி ஆட்சியர் அறிவுரை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது..
![கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - அதிகாரிகளுக் திருச்சி ஆட்சியர் அறிவுரை Trichy District Collector Pradeep Kumar advises officials to eradicate counterfeit liquor completely - TNN கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - அதிகாரிகளுக் திருச்சி ஆட்சியர் அறிவுரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/eedb7bd99b66c0cd0cf86088d6a26d5d1719383409220184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியது...
திருச்சி மாவட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு இயக்கம், கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி , மாநகரட்சி பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் மசாலா, கூலிப் மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனைகளை தடுத்தல், மெத்தனால் மற்றும் எத்தனால் பரிவர்த்தனை, கொண்டு செல்லுதல் மற்றும் மதுவிலக்கு குற்றங்களினை தடுக்கும் பொருட்டு 507 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களில், காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒருவர் ஆகியோர் அடங்கி இருப்பார்கள். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் தலைமையில் வார்டு வாரியாக துப்புறவு மேற்பார்வையாளர் நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுக்கள் அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், கடத்துதல் போன்ற செயல்பாடுகள் நடைபெறுகிறதா என்பது உள்ளிட்டவற்றை கண்காணித்திடவும் மேலும், அவ்வப்போது நடைபெறும் கோவில் திருவிழாக்கள், திருமணம், இதர வீட்டு விசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கள்ளச்சாராயம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் போதை பொருட்களான பான் மசாலா, கூல்லிப் மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஏதும் செய்யப்பட்டால் உடனடியாக காவல் துறைக்கும். உணவு பாதுகாப்புத் துறைக்கும் செல்லிடைப்பேசி , வாட்ஸ் அப் எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
போதைப்பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு..
கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தகவல்களுக்கு புகார் எண் :
மாநகர காவல் ஆணையர் அலுவலகம் - 9626273399
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - 7695883212
மாநிலம் - Toll Free No. 10581
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் தகவல்களுக்கு புகார் எண் : - 9626839595
மாநில புகார் எண் - 9444042322
தகவல்கள் தெரிவிப்பவரின் விபரங்கள் பாதுகாக்கப்படும். மேலும் ஒவ்வொரு வாரமும் தங்களது பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாக்கள், திருமணம், இதரவிட்டு விசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரத்தினை அந்தந்தக் குழு தலைவரிடம் தெரிவித்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நமது திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துதலை தடுத்திடும் வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு போதை பொருள் அற்ற மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், உதவி ஆணையர் கலால் உதயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள், அரசுத்துறை அலுவர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)