சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்த அம்மண அகோரி... நடந்தது காசியில் அல்ல திருச்சியில்!
திடீரென நள்ளிரவில் விச்சித்திரமாக சத்தம் இடுவதும், பூஜை செய்வதும், சுடுகாட்டுக்கு சென்று எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை பிட்டு சாப்பிடுவதும் மணிகண்டனின் வழக்கம்
ஆடை அணியாமல் கையில் எலும்புத் துண்டுகளுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சுடுகாடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான அகோரிகளை காசி போன்ற வட மாநிலங்களில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இதுபோன்ற சாமியார்கள், அகோரிகளை மக்கள் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், தான் திருச்சி அருகே அறியமங்கலத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி ஒருவர் விசித்திர பூஜை பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள அகோரிகள் போல மணிகண்டன் என்பவர் திருச்சியில் அடிக்கடி பூஜை நடத்தி வருகிறார். அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த வெங்கடேஷ் என்பவரது சடலத்தின் மீது ஏறி அமர்ந்த அகோரி மணிகண்டன் சங்கில் ஒலி எழுப்பியும் டம்ரா மேளம் அடித்தும் அவருக்காக ஜென்ம சாந்தி பூஜை நடத்தினார்.
அறியமங்கலத்தில் அகோர காளி சிலையை வைத்து வழிபாடு நடத்தி வரும் மணிகண்டன், காசிக்கு சென்று அகோரி பூஜைகளை கற்றுக்கொண்டவர். இந்த நிலையில் மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்த வெங்கடேஷ் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாகவே அவரது உடலில் ஏறி அமர்ந்து பூஜை நடத்த மணிகண்டனை வெங்கடேஷின் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
மணிகண்டனுக்கு தற்போது 41 வயதாகிறது. இவரது பெற்றோர் மேரியும் ராஜகோபாலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். மணிகண்டன் சிறுவயதிலேயே திருச்சியிலிருந்து காசிக்கு சென்றுவிட்டார். அங்கு அகோரிகளுடனே வாழ்ந்த மணிகண்டன் அகோரா பூஜைகளை கற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் திருச்சிக்கு வந்த மணிகண்டன் வட மாநில அகோரிகள் போன்ற ஆடை அணியாமல் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு எழும்புத் துண்டுகளுடன் வளம் வந்துகொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் விச்சித்திரமாக சத்தம் இடுவதும், பூஜை செய்வதும், சுடுகாட்டுக்கு சென்று எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை பிட்டு சாப்பிடுவதும் மணிகண்டனின் வழக்கம்.
திருச்சி உய்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஜெய் அகோர காளி கோயிலை கவனித்து வரும் மணிகண்டன் அங்கு தொடர் பூஜைகளை நடத்தி வருகிறார். இவருடன் 10க்கும் மேற்பட்டோர் இருந்து அகோரா பயிற்சி பெற்று வருகிறார்கள். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசையின் போதும், நவராத்திரி தினத்தின் போதும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார். நவராத்திரயை முன்னிட்டு 9 நாட்களுக்கு தலைகீழாக நின்று பூஜை செய்வது மணிகண்டனின் வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மணிகண்டனின் தாய் மேரி உயிரிழந்தார். அவரது சடலத்தின் மீது ஏறி அமர்ந்து மணிகண்டன் பூஜை நடத்தினார். இந்த காட்சிகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.