(Source: Poll of Polls)
திருச்சி: திருமணமான 4 மாதத்தில் காவலர் விஷம் குடித்து தற்கொலை...! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..
திருமணமான 4 மாதத்தில் விபரீதம், கீரமங்களம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது29) . இவர் கடந்த 2017ம்ஆண்டு முதல் கீரமங்களம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த அபீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் மனைவி அபினாவை கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடகாட்டில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு அரசர் குளம் வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினர் மற்றும் மனைவியுடன் செல்போனில் பேசிவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை கணவரை செல்போனில் அபீனா தொடர்பு கொண்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால், மாமனார் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அறைக்கு சென்று பார்த்த போது தமிழ்செல்வன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மகனை மீட்டு அறந்தாங்கியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 மாதத்தில் காவலர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்