மேலும் அறிய

திருச்சியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்! புதிய வழித்தடங்கள் எப்படி? - முழு விவரம் உள்ளே

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 23.12.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 22.12.2023 தேதி மதியம் 2 மணி முதல்,  24.12.2023 தேதி 2 மணி வரை வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

நகரப் பேருந்துகள்:

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள்

அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழச்சாலை ,திருவானைக்கோவில், ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு, JAC கார்னர், EVS சாலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மா மண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள்.

அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழச்சாலை ,T.V. கோயில் ட்ரங்க் சோதனை சாவடி எண்.6 கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம் சோதனை சாவடி எண்.6 , T.V. கோயில் ட்ரங்க் ரோடு - காந்திரோடு -ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை காவேரி பாலம் - சத்திரம் பேருந்து நிலையம்.

பெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகரப் பேருந்துகள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாதை வழியாகவே சென்று வர வேண்டும்.

திருச்சியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்! புதிய வழித்தடங்கள் எப்படி? - முழு விவரம் உள்ளே

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்

முக்கிய நபர்களின் வாகனங்கள்:

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் முக்கிய நபர்கள் காவேரி பாலம் வழியாக, மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக தெற்கு சித்திரை வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

வாகன அனுமதி சீட்டு உள்ளவர்கள:  (Proposed New Bus Stand) வாகன அனுமதிச் சீட்டு பெற்று கார்களில் வரும் பக்தர்கள், காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, T.V. கோயில் ட்ரங்க் ரோடு, காந்திரோடு வந்து அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதிய வாகன நிறுத்துமிடத்தில் கார்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் JAC கார்னர், EVS சாலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:- கார்கள் சென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்

"Y" ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு, தசாவதார சன்னதி, மேலூர் ரோடு - மேலவாசல் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்

அண்ணாசிலை - காவேரி பாலம் மாம்பழச்சாலை சந்திப்பு T.V. கோயில் ட்ரங்க் ரோடு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு -தசாவதார சன்னதி மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்

பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - "Y" ரோடு சந்திப்பு பஞ்சக்கரை ரோடு தசாவதார சன்னதி - மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

பேருந்துகள் : மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும்பக்தர்களின் பேருந்துகள்: 

பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு "Y" ரோடு சந்திப்பு காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

சென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள்:

"y" ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள்

அண்ணாசிலை ஓடத்துறை பாலம் ஓயாமாரி ரோடு, சென்னை பைபாஸ், சஞ்சீவிநகர் சந்திப்பு - "Y" ரோடு சந்திப்பு காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

திருச்சியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்! புதிய வழித்தடங்கள் எப்படி? - முழு விவரம் உள்ளே

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேன்கள்: 

வேன்களில் வரும் பக்தர்கள் காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, T.V. கோயில் ட்ரங்க் ரோடு, காந்திரோடு வழியாக நெல்சன் ரோட்டில் உள்ள சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள்

அண்ணாசிலை -காவேரி பாலம் மாம்பழச்சாலை காந்தி ரோடு JAC கார்னர், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு EVS ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள்:

அண்ணாசிலை காவேரி பாலம் மாம்பழச்சாலை T.V. கோயில் ட்ரங்க் ரோடு - சோதனை சாவடி எண்.6 கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம் - சோதனை சாவடி எண்.6 - T.V. கோயில் ட்ரங்க் ரோடு -காந்திரோடு -ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை -காவேரி பாலம் - சத்திரம் பேருந்து நிலையம்.

திருச்சியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்! புதிய வழித்தடங்கள் எப்படி? - முழு விவரம் உள்ளே

இரண்டு சக்கர வாகனங்கள்: 

1) அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழசாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2)அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழசாலை, திருவானைக்கோயில் ஜங்சன், நெல்சன் ரோடு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூ ஆண்டவர் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில், நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

3) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு -பஞ்சக்கரை ரோடு - யாத்ரி நிவாஸ் கொள்ளிடம் முருகன் கோவில் - தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ): 

1) அண்ணாசிலை, காவேரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு யாத்ரி நிவாஸ் - தசாவதார சன்னதி நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மேற்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக பொதுமக்களின் நலன்கருதி, மேற்கண்ட வாகன போக்குவரத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பை நல்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டுக்கொண்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.