மேலும் அறிய

குரூப் 4 தேர்வு - திருச்சி மாவட்டத்தில் 78 ஆயிரத்து 18 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4 தேர்வை திருச்சி மாவட்டத்தில் 78 ஆயிரத்து 18 பேர் எழுதினர்.

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நேற்று குரூப் - 4' தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 22 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில், 503 மையங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கியது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 320 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை கண்காணிக்க 12 பறக்கும்படை அலுவலர்களும், 93 இயங்குக்குழுக்களும் நியமிக்கப்பட்டு இருந்தன. அனைத்து மையங்களில் நடந்த தேர்வுகளும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வை 78 ஆயிரத்து 18 பேர் எழுதினார்கள். இது 83.37 சதவீதமாகும். தேர்வு மையங்களின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாத தால் அவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். 


குரூப் 4 தேர்வு - திருச்சி மாவட்டத்தில் 78 ஆயிரத்து 18 பேர் எழுதினர்

திருச்சி கண்டோன்மெண்ட் வெஸ்ட்ரி பள்ளியில் தேர்வு எழுத வந்த மணப்பாறையை சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண், சக்கர நாற்காலி இல்லாததால் அவர் தேர்வு மையத்துக்கு செல்ல சிரமப்பட்டார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் பெண் போலீஸ் இணைந்து அந்த பெண்ணை தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கி விட்டனர். திருச்சி மாவட்டத்தில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பல்வேறு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பார்வையற்ற தேர்வர்கள் உதவியாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். லால்குடியில் தேர்வு மையத்தை கோட்டாட்சியர் வைத்திநாதன், தாசில்தார் சிஸிலினா சுகந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget