மேலும் அறிய

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான சுகந்திர தினவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில் விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கிய பங்காக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பானது நேற்று  முதல் நடைமுறைக்கு வந்தது.  இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

மேலும் விமானத்தில் பயணம் செய்ய தேங்காய், எண்ணெய் வகைகள், மிளகாய் தூள், மிளகாய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது தொடரும் எனவும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோப்பநாய் குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்கேனர் உதவியுடன் மீண்டும் பொருட்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பயணிகள் உடைமையுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சுதந்திரதினத்தை  வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும்  மாவட்ட நிர்வாகம் மாநகரில் பல்வேறு இடங்களில் வண்ணங்களை பூசி, மக்களை கவரும் வகையிலும்,  மக்களுக்கு 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  மேலும் இந்த 75வது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget