அப்பாடா... நிம்மதி பிறந்தது... ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் மக்கள், வியாபாரிகள் ஹேப்பி அண்ணாச்சி!!!
திருச்சி திருவானைக்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரண்டு புதிய உயரழுத்த மின் கோபுரங்களை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tantransco ) நேற்று அமைத்துள்ளது.

திருச்சி: இனி மின்தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் பெருமிதமாக தெரிவித்துள்ளனர். எதனால் தெரியுங்களா?
திருச்சியில் கடந்த ஆண்டு அடித்து செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு பதிலாக புதியதாக 2 மின் கோபுரங்கள் கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்டுள்ளது. இதனால்தான் இனி மின் தடை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் புதிய மின் கோபுரங்கள் அமைத்து தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சாதனை படைத்துள்ளது என்றே கூறலாம்.
திருச்சி திருவானைக்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரண்டு புதிய உயரழுத்த மின் கோபுரங்களை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tantransco ) நேற்று அமைத்துள்ளது. இதன் மூலம் திருவானைக்கோவில் துணை மின் நிலையத்திற்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்துள்ளது. மேலும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவிலுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ரூ. 80 கோடி ரூபாய் மதிப்பில் 110 KV நிலத்தடி கேபிள் அமைக்கும் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2024ல், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 17 உயரழுத்த மின் கோபுரங்களில் 2 எண்ணிக்கையில் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கொள்ளிடம் வளைவுப் பாலம் அருகே இருந்த ஒரு மின் கோபுரத்தின் கீழ் பகுதி இடிந்து, 1.2 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கோபுரம் மற்றும் அதன் அருகில் இருந்த மற்றொரு மின் கோபுரமும் அடித்துச் செல்லப்பட்டது. தண்ணீரின் வேகத்தில் இவற்றால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இவ்வாறு 2 மின் கோபுரங்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உடனடியாக இரண்டு புதிய மின் கோபுரங்களை அமைக்கும் பணியை தொடங்கியது.
ஆரம்பித்த போதே தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு சோதனைதான் ஏற்பட்டது. காரணம் கடினமான பாறைகளாக இருந்ததால் கோபுரங்களை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், சிறப்பு இயந்திரங்களை பயன்படுத்தி 25 மீட்டர் ஆழத்தில் அடித்தளம் தோண்டப்பட்டது. எப்போதும் இதுபோன்று மின்கோபுரத்திற்கு வழக்கமாக 15 மீட்டர் ஆழத்தில் தான் அடித்தளம் அமைப்போம். மண் பரிசோதனை மற்றும் NIT திருச்சி அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் 25 மீட்டர் ஆழம் அடித்தளம் வடிவமைப்பு செய்யப்பட்டது
புதிய மின் கோபுரங்களிலிருந்து திருவானைக்கோவில் துணை மின் நிலையத்திற்கு கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றதால், நேற்று கொள்ளிடம் பாலத்தில் சில மணிநேரம் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய கோபுரங்கள் மின் விநியோகத்தை சீராக்கும். திருவானைக்கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினைகள் வராது. ஆற்றில் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரம் வழங்குவது ஆபத்தானது. எனவே, புதிய நிலத்தடி கேபிள் அமைக்கும் திட்டத்தை அரசுக்கு தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் அனுப்பி உள்ளது.
இந்த புதிய கோபுரங்கள் மூலம், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் மின் விநியோகம் சீராகும். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த மின் கோபுரங்களுக்கு பதிலாக தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் புதிய மின் கோபுரங்களை அமைத்துள்ளது. இந்த புதிய கோபுரங்கள் மூலம் திருவானைக்கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும்.
புதிய மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் மின் விநியோகம் சீராகும். மேலும், எதிர்காலத்தில் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவுகளின்போது மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நிலத்தடி கேபிள் அமைக்கும் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதனால் இனி வர்த்தகம் பாதிக்கப்படாது. மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்களின் அவதிக்கு தீர்வு கிடைத்துள்ளது.





















