மேலும் அறிய

History of Trichy : தமிழர் வரலாற்றை மேலும் சிறப்பாக்கும் கிபி 800 இல் அமைக்கப்பட்ட 'ஸ்வஸ்திக் கிணறு' 

கிபி 800 இல் ஆன்மீக குறியீடுகளில் ஒன்றான ஸ்வஸ்திக் வடிவத்தில் இருப்பதால் கிணறு அமைக்கபட்டதால் இது ஸ்வஸ்திக் கிணறு என பெயர் பெற்றது.

திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெள்ளறை ஆலயத்தின் பின்புறமாக அமைந்துள்ளது இந்த ஸ்வஸ்திக் கிணறு. இது ஆன்மீக குறியீடுகளில் ஒன்றான ஸ்வஸ்திக் வடிவத்தில் இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. திருவெள்ளறையில் அமைந்துள்ள திருத்தலமான புண்டரீகாக்ஷ பெருமாள் திருக்கோவில் உயரமான மதிலையும், குடவரை அமைப்பையும், பல்வேறு அழகிய சிற்பங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் இறைவன் புண்டரிகாஷன், தாயார்-செண்பகவல்லி ஆவர். இது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் ‘ஆதி திருவரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பின்புறமாக அமைந்துள்ள தான் இந்த ஸ்வஸ்திக் கிணறு ஆகும். இந்தக் கிணறு கி.பி. 800-ல், பல்லவ மன்னனான தந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கிணறு, ‘மார் பிடுகு கிணறு’ என்று அழைக்கப்பட்டதாக, அதில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தப் பெயர் தந்திவர்மனின் பெயர்களில் ஒன்று ஆகும். இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கிச் செல்லும் வகையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு புற வாசல்களிலும் உள் பக்கத்தில் குறுக்காக நிலை கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை மூன்று படிநிலைகளாக காணப்படுகின்றன.

History of Trichy : தமிழர் வரலாற்றை மேலும் சிறப்பாக்கும் கிபி 800 இல் அமைக்கப்பட்ட 'ஸ்வஸ்திக் கிணறு' 

மேலும் கிழக்குப்பக்க வாசலின் முதல் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படிநிலையில், யானை வாகனத்தோடு ஐயனாரும், பூரணாம்பிகையும் மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப் பறவைகளோம் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் தெற்குப்புற வாசலின் முதல் நிலைக் காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படி நிலையில் கொற்றவை, மற்றும் சிங்கம், மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம்படி நிலையில் விநாயகரின் உருவம் உள்ளது. மேற்குப் புற வாசலின் முதல் நிலைக் காலில், கிருஷ்ண பகவானின் லீலைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது அவர் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில், சிவபெருமான்-பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக் காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைபடியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்துவரும் சிற்பம் இருக்கிறது. இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஒரு ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

History of Trichy : தமிழர் வரலாற்றை மேலும் சிறப்பாக்கும் கிபி 800 இல் அமைக்கப்பட்ட 'ஸ்வஸ்திக் கிணறு' 

இக்கிணற்றின் சுவரில் காணப்படும் பாடல் கல்வெட்டொன்று இதே காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடல்,

“ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாய்தேய்
தண்டார் முப்பு வயதுன்னை தளரச்செய்து நில்லா முன்
உண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைமினேய்” 

என்று வாழ்வு என்னும் காலச்சக்கரம் நிலையானதல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. வாழ்க்கை நிலையாமையைப் பற்றிக் கூறும் அரிய கல்வெட்டாக இது கருதப்படுகிறது. நான்கு புறங்களிலிருந்து கிணற்றின் உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்ட படிகளில் பல்லவர் கால எண்கள் 1 முதல் 10 வரை இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Embed widget