போதைப்பொருள், லாட்டரி சீட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை
திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியான முறையில் இயங்க வேண்டும் - மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவு.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சரித்திர பதிவேட்டில் இருக்கக்கூடிய நபர்கள் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கண்காணிக்க மாதந்தோறும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடந்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் துறை ஆணையர் காமினி கூறியது..
கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்கள். அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார் .
மேலும், சட்டம் ஒழுங்கை பேணிகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும், ரோந்தின்போது காவல்துறையிள் பிரத்யோகமாக கொடுக்கபட்டுள்ள (Face Recognition System) செய்யவும், திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள சுமார் CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருச்சி மாநகரில் உள்ள 50 காவல் பூத்களை (POLICE BOOTH) சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும், எந்தநேரத்திலும் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்கள்.மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருச்சி மாநகரை குற்ற வழக்குகள் இல்லாத மாநகராக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.