மேலும் அறிய

ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் - கோவில் நிர்வாகம் விளக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு கோவில் அதிகாரிகளே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. ஆகையால் 108 வைணவ தலங்களில் முதன்மையான தளமாக இது விளங்குகிறது. குறிப்பாக பூலோகம் வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.இத்தகையை சிறப்பு மிக்க கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பது குறிப்பிடதக்கது. மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளது. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கோவிலின் கிழக்கு புறத்தில் இருக்கும் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஸ்ரீரங்கம்  கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் - கோவில் நிர்வாகம் விளக்கம்

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, இந்த கிழக்கு வாசலில் இருக்கும் கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும். முதலில் மொட்டை கோபுரமாக இருந்தது. பின்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் அவை பூரண அமைக்கப்பட்டு,மேல் நோக்கி கோபுரமாக எழுப்பப்பட்டது. குறிப்பாக இந்த கோபுரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோபுரத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் சில காரணங்களால் இன்று கோபுரத்தில் இருக்கும் சுவர் இடிந்து விழுந்து விட்டது. கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து அறநிலை துறைக்கு அனுப்பப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் ரூபாய் 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து , பழமை மாறாமல் முழுமையாக கோபுரம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீரங்கம்  கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் - கோவில் நிர்வாகம் விளக்கம்

பொதுமக்கள் கருத்து : 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். தினமும் உண்டியல் காணிக்கை செலுத்துகிறார்கள், இந்த கோவிலுக்கு வருவாய் அதிகமாக தான் உள்ளது. இருப்பினும் கோவில் நிர்வாகம் எதற்காக சீரமைக்கும் பணிகளை தொடங்குவதில் அலட்சியல் காட்டுக்கிறது. அதேபோல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் முறையாக கோவிலை பராமரிக்கவில்லை, இதுபோன்று சம்பவம் இனிமேல் நடக்க கூடாது.  மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேசமயம் இன்று நடந்த செயலுக்கு சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக இந்து அறநிலைத்துறை - கோவில் நிர்வாகம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget