மேலும் அறிய

திருச்சி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து 27 மாணவ - மாணவிகள் காயம்

திருச்சி அருகே மாத்தூரில் பள்ளி வேன் கவிழ்ந்து 27 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி மற்றும் தனியார் வேன்கள் மூலம் வந்து செல்கின்றனர். அதன்படி திருச்சி மன்னார்புரத்திலிருந்து நேற்று காலை 8 மணியளவில் புறப்பட்ட தனியார் வேன் ஒன்று கே.கே.நகர், உடையான்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டி, குமாரமங்கலம், மாத்தூர் வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் 34 பேரை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த பக்ருதீன் (வயது 40) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். அந்த வேன் காலை 8.30 மணியளவில் மாத்தூர் அருகே குமாரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவ-மாணவிகள் அலறினர்.  இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர்.

திருச்சி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து 27 மாணவ - மாணவிகள் காயம்

பின்னர் காயமடைந்த மாணவ- மாணவிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் மானசவர்த்தினி (வயது 13), நித்தியபிரியா (10), நந்தினி (13), தேட்சாணிபிரியா (14), தீபஸ்ரீ (12), லிங்கேஸ் (14), ஜோத்தும் (13), ஜஸ்வின்ஸ்ரீ (8), அருண்குமார் (9), மாதவன் (10), கிரிசாந்த் (14), ஜெயந்தி ஸ்ரீ (16), வைஷ்ணவி (16), பிரியங்கா (14), கிருத்திக்ரோஷன் (7), பூர்ணிமா (9), ஆதித்யா (11), அர்ஜுன் (11), கவுசல்யா (7), அதிதி (10), ஹரி (16), தியா (11), பஞ்சதீஸ்வரன் (12), அபிராமி (13), தேவிகா (11), பூஜா ஸ்ரீ (11) ஆகிய 27 மாணவ- மாணவிகளுக்கு கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் காயமின்றி தப்பிய மாணவர்களை வேறு வாகனத்தின் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். அதேபோல் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனால் குமாரமங்கலம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget