மேலும் அறிய
Advertisement
புதுக்கோட்டை : குழந்தையின்மை என காரணம் சொல்லி வேறு பெண்ணுடன் தொடர்பு? அடித்துக் கொல்லப்பட்டாரா இளம்பெண்?
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன பெண்ணை அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கள்ளர் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தியின் மகன் இளையராஜா (வயது 36). இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. ஆகையால் இருவரும் பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை இல்லை என்பது இருவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இதனால் இருவருக்கும் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரச்சனையில் முடியும் என அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இளையராஜாவுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தினமும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தனது கணவன் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்து இருந்தது தாங்கமுடியாமல் மாரியம்மாள் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மாரியம்மாளுக்கு குழந்தை இல்லை என மனவேதனையில் இருந்தவருக்கு, தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் மாரியம்மாள் இறந்து கிடந்தார். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
காது, மூக்கு உள்ளிட்டவைகளில் ரத்தம், வந்துள்ளதால் அடித்துத்தான் கொலை செய்யப் பட்டதாக கூறி மேலத்தானியம்- காரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கொலை செய்ததாக கூறி மாரியம்மாளின் கணவர் இளையராஜா மற்றும் அவரது அண்ணன் முருகேசன் மனைவி கமலா, இளையராஜாவின் தங்கை தவமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் துணை காவல்துறை சூப்பிரண்டு அருள்மணி அரசு மற்றும் காவல்துரையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இளையராஜாவை கைது செய்துவிட்டோம். மேலும் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காரையூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்த இரண்டு வருடங்களில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion