மேலும் அறிய

ரயிலில் பட்டாசு பெட்டிகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை - ரயில்வே துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை.

தீபாவளி பண்டிகை நாளை 12  ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ரயில்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மற்றும் பட்டாசுப் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று ( 10.11.2023 ) காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் அதி வேக விரைவு ரயில் காலை 9.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடையை வந்தடைந்தது. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணத்தின் போது பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

ரயிலில் பட்டாசு பெட்டிகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை - ரயில்வே துறை எச்சரிக்கை

மேலும், ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்‌. மேலும் படியில் தொங்கிக் கொண்டோ, படியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே கேட் போட்ட பிறகு தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில் வரும்போது தண்டவாங்களை கடந்து செல்வது போன்றவற்றை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலாவது நடை மேடையில் நாடகம் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்.. தீபாவளி உள்பட பண்டிகை காலங்களில் ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எளிதில் தீ பற்றி எரியக்கூடிய ஹீட்டர்ஸ், கேஸ் சிலிண்டர் , பட்டாசு, தீ பெட்டி கொண்டு செல்லக்கூடாது. திருச்சி கோட்டத்தில் ரயிலில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றது தொடர்பாக 2 வழக்குகளும், லெவல் கிராசிங் தொடர்பாக 20 வழக்குகளும், ரயில் பெட்டியில் புகை பிடித்தது தொடர்பாக 2 வழக்குகளும்  பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் மற்றும் ரயிலில் அதிக அளவில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் ஆகையால் அனைவரின் பாதுகாப்பை கருதி ரயில்வே துறை இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் வெடிபொருட்களை அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து பயணம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறதா? 30–50 ஆண்டு குத்தகையா?
திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறதா? 30–50 ஆண்டு குத்தகையா?
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே
திருச்சியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே புறப்படுங்க நண்பர்களே

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget