மேலும் அறிய

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி - எப்போது தெரியுமா? செல்வப் பெருந்தகை சொன்ன தகவல்

தமிழ்நாடு மக்களுக்கு பிரச்சனை என்றால் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருப்பார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ்,  தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும்  மாவட்ட தலைவர்கள் , நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மேடைப்பேச்சு..

இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முற்றிலும் ஓரங்கட்ட வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள் அது ஒருபோதும் நடக்காது.

நடந்து முடிந்த தேர்தல்களில் இந்தியா கூட்டணி மக்கள் செல்வாக்கை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி - எப்போது தெரியுமா? செல்வப் பெருந்தகை சொன்ன தகவல்

திருச்சி மேயர் பதவியை இழந்ததற்கு காரணம் என்ன

ஆகையால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை வெறும் வளர்ச்சி அடையவும் முதன்மை இயக்கமாக மாற்றவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி என்றாலே ஒரு வரலாற்று இடமாகும். அத்தகைய இடத்தில் இருக்கிறோம் மலைக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மனது வைத்தால் புனித ஜார்ஜ் கோட்டையை நாம் விரைவில் அடைய முடியும். 

இத்தகைய சூழ்நிலை விரைவில் நிச்சயம் நடக்கும் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது பரிணாம வளர்ச்சியை காங்கிரஸ் கட்சி அடைந்துள்ளது. 

நமது கட்சியில் சிலருக்கு வருத்தம் உள்ளது. ஏனென்றால் புதிய நிர்வாகிகள் சேர்ந்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற எண்ணத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி யாரும் நினைத்து செயல்படக் கூடாது புதிய நிர்வாகிகளை ஒன்றிணைத்து அரவணைத்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் தான் பல இடங்களை நாம் இழந்து உள்ளோம். குறிப்பாக திருச்சி மேயர் பதவியாக இருந்தாலும், அதே போன்று பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய சேர்மேன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை நாம் இழந்துள்ளோம். இதற்கு காரணம் என்ன. சற்று அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் நாம் அனைத்தையும் இழந்து வருகிறோம்.

கடந்த காலத்தில் நடந்தது அனைத்தும் முடிந்து விட்டது ,வருங்காலத்தில் நல்லதே நடக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி - எப்போது தெரியுமா? செல்வப் பெருந்தகை சொன்ன தகவல்

மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருக்கக்கூடிய சில கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும். புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 

என்னைப் பொறுத்தவரை எனக்கு வழங்கிய தலைவர் பதவி என்பது ஒரு பொறுப்பு தான். நான் எப்போதும் காங்கிரஸ் கமிட்டியின் தொண்டன்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மக்களுடைய ஆதரவு முழுமையாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வேண்டும் அதற்கான செயல்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மக்கள் பிரச்சனைகளை முன்னெடுப்பதற்காக முதல் கட்டமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம், அதேபோல் நாகப்பட்டினம் முதல் நீலகிரி வரை நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். இந்த நடை பயணத்தில் நமது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்து, கலந்து கொள்ள உள்ளார்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget