மேலும் அறிய
விசிகவுக்கு கிடைத்த காமராஜர்! எதற்கும் அஞ்சாத சிங்கம் திருமாவளவன் - திருநாவுகரசர் எம்.பி புகழாரம்
எதற்கும் அஞ்சாத சிங்கம் , திருமாவளவன் ஒரு சின்ன அம்பேத்கர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. - திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி கட்சியின் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் மாமனிதருக்கு மணி விழா திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் கூறியது... “மிகச் சிறந்த கடுமையான உழைப்பாளி திருமாவளவன். ஒரு இயக்கம் வெற்றி பெற வேண்டுமானால் சிறந்த தலைவர் வேண்டும், உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த தலைவராக திருமாவளவன் கிடைத்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிம்மக் குரலாக சிங்கத்தமிழன் திருமாவளவன் குரல் ஒலித்து வருகிறது. காங்கிரசுக்கு, காமராஜர் கிடைத்தது போல, விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்த காமராஜர் திருமாவளவன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”எதற்கும் அஞ்சாத சிங்கம் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த இன்னொரு ராகுல் காந்தி திருமாவளவன் ( திருமணமாகாமல் கட்சிக்காக உழைப்பவர் என்பதை குறிப்பிட்டு பேசினார்). திருமாவளவன் ஒரு சின்ன அம்பேத்கர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ராகுல் காந்தி பிரதமர் ஆனால் திருமாவளவன் நிச்சயம் கேபினட் அமைச்சராவார். ( தொண்டர்களின் ஆரவாரத்தை பார்த்த பின்னர்) கவலைப்படாதீர்கள் அதைவிட பெரிய பதவியாக ஜனாதிபதி ஆக்கி விடலாம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion