மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாட்டரி சீட் விற்பனை - 6 பேர் கைது

அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், ரூ.4½ லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு 2003-ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கள்ளத்தனமாக லாட்டரியை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமானதாக இருக்கிறது. கேரளாவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் அல்லது பிற வேலைகளுக்காக செல்பவர்கள் அங்கு விற்பனையாகும் லாட்டரிகளை வாங்கி வருவார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக அதிகளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து  போலீஸார் அப்பகுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு புகார் மனுக்களை சமூக ஆர்வலர்கள் அனுப்பினர். இதனை தொடர்ந்து மத்திய மண்டலங்களில் காவல்துறையினர் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாட்டரி சீட்  விற்பனை -  6 பேர் கைது
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் கீழ தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அப்பகுதியில் இன்று நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பர்வீன்குமார் (வயது 29), ராமு (23), கார்த்திக் (24), விக்னேஷ் (28), சரவணகுமார் (26), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்க பயன்படுத்திய கார், 8 மடிக்கணினிகள், 6 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 390-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget