மேலும் அறிய

காங்கிரஸ் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே இடம் உண்டு - திருச்சி வேலுச்சாமி

தமிழ்நாடு பாஜகவில் இருப்பவர்கள் பலர் குற்றவாளிகள் என்பது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது - திருச்சி வேலுச்சாமி பேச்சு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.  

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ்,  தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும்  மாவட்ட தலைவர்கள் , நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்

காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மேடை பேச்சு.. 

திருச்சி என்றாலே வரலாற்று சிறப்புடைய ஒரு இடம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதுவரை திருச்சியில் மத மோதல் கலவரம் வந்ததில்லை. அனைவரும் சமம் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள். 

காமராஜருக்கும் திருச்சிக்கும் நீண்ட உறவு உண்டு. மக்களையும் சாமானிய தொண்டர்களையும் உணர்வுப்பூர்வமாக மதிக்கக் கூடியவர்.

கடை கோடி தொண்டனாக இருந்தாலும் அரவணைத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் காமராஜருக்கு நிகரான தலைவர் யாருமில்லை.

நாம் யாரும் , யாருக்கும் அடிமை இல்லை என உறுதியாக அனைவரிடமும் நடந்து கொண்டவர் காமராஜர்.


காங்கிரஸ் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே இடம் உண்டு - திருச்சி வேலுச்சாமி

காங்கிரஸ் இருந்தால் இந்தியா வளர்ச்சி அடையும்

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி வருவதற்கு நம் அனைவரும் ஒன்று இணைந்து பாடுபட வேண்டும்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி முதன்மை இயக்கமாக மாற வேண்டும், அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தான் பாஜகவில் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பெண் நிர்வாகி சம்பந்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும்.

மானங்கெட்டவர்கள், மனிதனுக்கு பிறந்தவர்கள் தூக்கில் தொங்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நான் என்று சொன்னால் அவ்வாறே செயல்பட்டால் அவர்களுக்கு எப்போதும்  கட்சியில் இடமில்லை. 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைவரும் சமம் நாம் என்று சொல்ல வேண்டும் ஒற்றுமையாக இணைந்து பாடுபட வேண்டும். 

காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்தால் இந்தியா வளர்ச்சி அடையும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி இருந்தால் இந்தியா இருக்கும். காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் இந்தியா இருக்காது. 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க தயாராக வேண்டும். திருச்சியில் நடைபெற்ற இந்த செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு ஒரு பெரும் எழுச்சி ஏற்படுத்த வேண்டும். 

விரைவில் தமிழ்நாட்டில் முதன்மை இயக்கமாக காங்கிரஸ் கட்சி உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget