மேலும் அறிய

திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் , பழைய பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க - மாவட்ட நிர்வாகம் முடிவு.

திருச்சி மாநகரம்-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976-ம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள இந்த பாலம் பழுதடைந்ததால், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அவை மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் கடந்த ஒரு வாரமாக புது காவிரி பாலம் பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. காலை, மாலை வேளைகளில் ஒரு வாகனம் அந்த பாலத்தை கடந்து செல்ல அரை மணி நேரம் வரை ஆகிறது. 3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகிறார்கள்.

திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள பழைய இரும்பு பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த இரும்பு பாலமானது 1,754-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு கடந்த 1,929-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு 1,976-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் ஒருபுறத்தில் திருவெறும்பூருக்கு செல்லும் குடிநீர் குழாயும், மறுபுறம் கழிவுநீர் குழாயும் செல்வதால் 2 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் 3 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிச்செல்வதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பழைய இரும்பு பாலத்தை மீண்டும் திறந்து, இருசக்கர வாகனங்கள் மட்டுமாவது செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்கலாமா? அல்லது இருவழியில் அனுமதிக்கலாமா? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று பழைய காவிரி இரும்பு பாலத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் அந்த பாலத்தில் முளைத்திருந்த புற்களை வெட்டி, பாலத்தை சுத்தப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலத்தை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்த இரும்பு பாலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் வரும் வகையில் ஒரு வழி பாதையாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாலத்தை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget