மேலும் அறிய

மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது- திருச்சி காவல்துறை ஆணையர்

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,139 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபடலாம் என மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்துவிட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கும், நீர் நிலைகளுக்கும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 909 இடங்களிலும், பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் திடல், கோரிமேடு, உறையூர், மன்னார்புரம், கல்லுக்குழி உள்பட 230 இடங்களிலும் என்று மொத்தம் 1,139 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது- திருச்சி காவல்துறை ஆணையர்

இந்த சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் நேற்றே சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். பா.ஜனதா கட்சி சார்பாக மன்னார்புரம் நடுத்தெருவில் வைக்க மும்பையில் இருந்து ரெயில் மூலம் 6 அடி உயர விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டது. ஆபரணங்கள், கிரீடம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும். விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது- திருச்சி காவல்துறை ஆணையர்

மேலும் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பவர்கள், சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் யாரும் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என்றும், விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கும் விழா குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் பணியிலும் ஈடுபட வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.  மேலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். குறிப்பாக அனுமதி இல்லாமல் சிலைகளை வைத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அசம்பாவிதம் ஏற்படும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் விதமாக யார் செயல்பட கூடாது. இதுபோன்று தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
Embed widget