மேலும் அறிய

'அடுத்த எட்டு மாசம் ரணகளமா இருக்கும்.. ஊழலில் அண்ணன், தம்பி எல்லாம் பார்க்க முடியாது' - அண்ணாமலை அதிரடி..!

திமுக அமைச்சர்கள் குறித்து நாங்கள் வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து இது எங்கள் சொத்து இல்லை என ஒருவர் கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அண்ணன், தம்பி கூடாது:

அப்போது அவர் கூறியதாவது, ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள் அண்ணன், தம்பி என்றெல்லாம் பார்க்க கூடாது. தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட ஊழல் பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். எங்களுக்கு இங்கே யாரும் பங்காளிகள் கிடையாது.  எங்களுக்கு எல்லோருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பா.ஜ.க. பகையாளிகளாக தான் பார்க்கும் என்றார்.

மேலும், ரபேல் வாட்ச் சீரியல் நம்பர் மாறி உள்ளது என்ற தி.மு.க. அமைச்சர் கேள்விக்கு? சாராயா அமைச்சர் சரக்கு போட்டு பேசி இருப்பார் ( வாட்சை கையில் கலட்டி காட்டிய அண்ணாமலை ) 147 தான் என் வாட்ச் நம்பர், மேடையில் படிக்கும் போது உடனே படித்துவிட்டேன். திமுக பட்டியலில் நான் வெளியிட்டேன். ஆனால் எனக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுகவினர் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை என கூறினார். கிட்டத்தட்ட 150 நிறுவனங்களை நாங்கள் சொல்லி உள்ளோம்,  நான் ஓனர் இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

அடுத்த எட்டு மாசம் ரணகளமா இருக்கும்.. ஊழலில் அண்ணன், தம்பி எல்லாம் பார்க்க முடியாது' - அண்ணாமலை அதிரடி..!

மேலும் அன்பில் மகேஷ் - உதயநிதி ஸ்டாலினும் நோபில் ஸ்டீலில் நேரடியாக உள்ளார். நோபல் ஸ்டீல் கம்பெனியின் டைரக்டராக இல்லை என்று உதயநிதி இதுவரை கூறவில்லை. மணிலாண்டரிங் செய்து முதல்வர் 1000ம் கோடி கொண்டு வந்தார் என்பது எனது நேரடி குற்றச்சாட்டு ஆகும். சி.பி.ஐ.யில் இது குறித்து கம்ப்ளைன்ட் செய்ய உள்ளோம் என்றார்.

ரணகளமாக இருக்கும்:

டெக்னிக்கல் ஆடிட்டிங் தான் நாங்கள் கேட்பது, பழைய ஜாதகம் அல்ல நாங்கள் கேட்பது. நான் இது வரை எந்த பணமும் கொள்ளையடிக்கவில்லை. இங்கு ஒவ்வொரு அமைச்சர்களும் கிட்டத்தட்ட 10  பி.ஏ.க்கள் வைத்திருக்கிறார்கள். 100 வேலை ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு சம்பளம் எப்படி வழங்குகிறார்கள்  என கேள்வி எழுப்பினார்.

மேலும் என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டை 12 வருடமாக ஓப்பனாக நான் கொடுத்துள்ளேன். என்னுடைய மூன்று பி.ஏ.க்களுக்கு சம்பளம் எனது நண்பர்கள் அளிக்கிறார்கள். SWIGGYல் நான் சாப்பிடுவது உள்ளிட்ட பில்லை கூட என்னால் காட்ட முடியும். நான் கேட்கிறேன்  ஒரு நாள் உங்களின் பேப்பரை காட்டுங்கடா பார்ப்போம்  என்றார். வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும். அடுத்த எட்டு மாசம் இன்னும் ரணகளமாக இருக்கும் , defamation case வந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget