பதவிகள் இருப்பதால் காலைதூக்கி தோளில் போட்டுக்கொண்டு செயல்படக்கூடாது - அமைச்சர் நேரு
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்லுவார். ஆனால் இன்றைக்கு நம்முடைய தலைவரின் செயல்பாட்டால் எதிரிகள் முன்னேறாத நிலையை உள்ளது. அமைச்சர் நேரு பேச்சு..
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வரவேற்று பேசினார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக தமிழகம் முழுவதும் கிராமம், நகரம், ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை பகுதிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். தி.மு.க.வில் தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை சேர்க்கும் பணி நடைபெற வேண்டும் என்று தலைவர் நமக்கெல்லாம் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட வேண்டும். மேலும் அ.தி.மு.க.வில் அடிக்கடி சொல்லுவார்கள், தங்களிடம் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறிக்கொண்டு இருப்பார்கள். அதனை நாம் மாற்றி தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை செய்ய வேண்டும்.தற்பொழுது நமது கட் சியில் 90 லட்சம் பேர் உள்ளனர். ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார். ஆனால் நாம் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க முன் வரவேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்லுவார். ஆனால் இன்றைக்கு நம்முடைய தலைவரின் செயல்பாட்டால் எதிரிகள் முன்னேறாத நிலையை அவர் ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் தி.மு.க.வினர் சட்டமன்ற தொகுதிகளில் பூத்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
எனவே அனைவரும் பொறுப்புணர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். மேலும் நாம் மேயராக இருக்கிறோம், சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோன் என்று நினைத்து கால் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு செயல்படகூடாது, நான் சொன்னது கால் மட்டும் தான் என கூறுனார். நமது ஆதரவாளர்கள், இளைஞர்கள் அனைவரையும் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களான சந்திரசேகர், உத்திராபதி, செந்தில் ஆகியோர் செயல்பட்டு தீவிர உறுப்பினர் சேர்ப்பில் பணியாற்றுவார்கள். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் மேற்கு மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், பழனியாண்டி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, பா.பரணிக்குமார், பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், இளங்கோ, கமால் முஸ்தபா, கே.எஸ்.நாகராஜன், ராம்குமார், கனகராஜ், மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஒன்றியச்செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, தில்லைநகர் கண்ணன், டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, டோல் கேட் சுப்பிரமணி, இளைஞரணி ஆனந்த், பி.ஆர்.சிங்காரம், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், விவசாய அணி ஜெயக்குமார், மூக்கன், பந்தல் ராமு, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ஜெகன்னாதன், விஜயா ஜெயராஜ், செல்வி மணி, மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன், அல்லூர் கருணாநிதி, துபேல் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித் தும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.