மேலும் அறிய

எதிலும் ஒத்து போகாத மத்திய அரசை வைத்து எதுவும் சாதிக்கமுடியவில்லை - அமைச்சர் எ.வ .வேலு

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் சர்வீஸ் சாலை வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு சாலை அமைப்பதற்கு மாநில அரசுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறது. மேலும் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டாம் உயர் மட்ட பாலம் மட்டும் போதும் என்கிறார்கள்,  ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டும் என்று கேட்கிறார்கள்.


எதிலும் ஒத்து போகாத மத்திய அரசை வைத்து எதுவும் சாதிக்கமுடியவில்லை - அமைச்சர் எ.வ .வேலு

மேலும், அமைச்சர் கே.என் நேரு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நானும் தொடர்ந்து 3 முறை இது தொடர்பாக அனைத்து மக்களையும் ஒன்றாக கொண்டு வர வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  இது மட்டுமல்லாமல் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.  துறை சார்ந்த அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாங்கள் கோரிக்கை வைத்த போது தபாலை வாங்கிய வைத்துக் கொண்டார், ஆனால் ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லை. நகாய் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ) வாயிலாக திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் தஞ்சை பைபாசில் உயர்மட்ட பாலம் அமைப்பதாக இருக்கட்டும்,  இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை அமைப்பதாக இருக்கட்டும் மாநில அரசு கண்டிப்பாக அமைத்து தரும்

உரிய கால நிர்ணயம் முடிந்த பின்னரும் செயல்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதி உள்ளோம். பணத்தை மட்டும் வசூல் செய்கிறார்களே தவிர எங்கும் பராமரிப்பு இல்லை. 7 மீட்டர் சாலையை 10 மீட்டர் சாலையாக மாற்றி சுங்க கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசு, முறையாக பராமரிப்பது இல்லை குறிப்பாக முட்களை கூட அகற்றுவதில்லை. மாநில அரசுக்கு ஒத்துப்போகக்கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால் தான் எதையும் சரி செய்ய முடியும். மத்திய அரசு முரண்பட்டு இருப்பதால் நமக்கு சரியான பதில் கிடைக்கபெறவில்லை. மத்திய அரசின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதில் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து மாநில அரசு சார்பாக பிரதிநிதிகள் நாங்கள் கலந்து கொள்கிறோம்.  ஆனால் மத்திய அரசுதான் எங்களுக்கு எதிலும் ஒத்துப் போகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget