மேலும் அறிய

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பாக காவிரி பிரச்சனை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி கண்டன முழக்கம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியது..  காவிரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை, அதே சமயம் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் சொல்வதையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை.  தஞ்சை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடுகளவு கூட மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். இந்த மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம். 

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

மேலும் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்ய கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காமல் ஏழை,  எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். நமது நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த 16 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு 2 லட்சம் 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு நிதியை ஒதுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு நிதியை குறைத்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  நம் நாட்டு மக்களை  முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.  மேலும், விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில
அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார்.  தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை முதன்முதலாக கையில் எடுத்தது வைகோ அவர்கள் தான்,  அந்தத் திட்டம் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருந்தால்,   இது போன்ற பிரச்சனைகள் எதுவும் தற்போது வந்திருக்காது என்றார். 

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமில்லை என  ஏற்கனவே தெரிவித்து விட்டேன். மேலும் வருகின்ற தேர்தலில் மதிமுகவிற்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து எங்கள் கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள். அதேசமயம் தேர்தலில் எங்களது சின்னமான பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என நிறைவேற்றுவார்  நம்பிக்கை உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி இருந்து விலை கேட்டு அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அதேசமயம் அதிமுக சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.  எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது வலுவாக உள்ளது. மற்ற கட்சிகளில் கூட்டணி பிரிவதற்கு,  எங்கள் கட்சியில் கூட்டணி பிரிவு ஏற்படும் என சந்தேகங்கள் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
ABP Premium

வீடியோ

Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
Embed widget