Lok Sabha Election 2024: "செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" துரை வைகோ உருக்கம்!
செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திருச்சி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
![Lok Sabha Election 2024: Lok Sabha Election 2024 Even if we die we will contest on our symbol don't hurt us Durai Vaiko Lok Sabha Election 2024:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/24/83728a74087bbe30f4ce2934889ef7401711266304480184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அறிமுக மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக- கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய மதிமுக வேட்பாளர் துரை வைகோ கூறியது,
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சரும் கே.என். நேரு , அன்பில் மகேஷ், ரகுபதி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.கடந்த 3 நாட்களாக அமைச்சர் நேரு ஒரு இறுக்கமாக இருந்தார். இன்றுதான் அவர் சிரித்து நான் பார்க்கிறேன். அருண் நேரு போன்று தான், நானும் உங்களுக்கு எனக் கூறினார்.
விருப்பமில்லாமல் அரசியலுக்கு வந்தேன்:
அரசியலுக்கு வருவதற்கு துளிகூட விருப்பம் இல்லை. அனைவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை ஒன்றுதான் காரணமாக அமையும். இறப்பு என்பது மனிதர்களாக பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். எனது அப்பா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அடுத்தது கட்சியை யார் வழி நடத்துவது என்பது வெறும் பேசும் பொருளாகவும், கேள்விக்குறியாகவே இருந்தது. அப்போது என் கட்சியினர் அனைவரும் என்னை தேர்வு செய்தார்கள். எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை கட்சியில் முக்கிய, மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர், அவர்களை கட்சியை வழி நடத்த வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு யாரும் ஒத்துழைக்கவில்லை.
செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி
என் அப்பா ஒரு சகாப்தம் என்று கூறும்போது மேடையில் அனைவரும் முன்பும் கண்கலங்கி அழுதார். என் அப்பாவுக்கு பிறகு அவர் ஓடி ஓடி உழைத்து வளர்த்த கட்சி அழிந்து விடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி, வலு கட்டாயமாக அரசியலுக்கு வரவழைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் என் அப்பாவிற்கு தலைகுணிவு வரக்கூடாது என்பதற்காக விருப்பமே இல்லாமல் அரசியலுக்கு வந்தேன். எங்களை புண்படுத்தாதீர்கள் எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் தொடர்ந்து திமுகவுடன் பயணித்திருப்போம். எங்களுடைய நோக்கம் தமிழ்நாட்டில் மதவாத கட்சி பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மட்டுமே. மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள்.க்ஷ
இன்று மேடையில் கூறிய போது திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் எந்த சின்னத்தில் போட்டியிட போறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதை காரன். மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள் நாங்கள் சிறிய கட்சி தான். இந்த தேர்தலில் கூட எனக்காக நான் வாய்ப்புகள் கேட்கவில்லை என் கட்சியில் இருக்கக்கூடிய சில நபர்களுக்காக வாய்ப்பு கேட்டேன். ஆனால் அனைவரும் என்னை நிறுத்தி விட்டார்கள். வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருந்தாலும் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணித்திருப்போம். இந்த செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)