![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sudesi App | ஓலா, ஊபருக்கு மாற்றாக சுதேசி.. மக்களோட அன்பை அள்ளுறாங்க இந்த ஆட்டோக்காரங்க..!
சுதேசி செயலிக்கு பொதுமக்கள், இளைஞர்கள், முழு ஆதரவு அளிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![Sudesi App | ஓலா, ஊபருக்கு மாற்றாக சுதேசி.. மக்களோட அன்பை அள்ளுறாங்க இந்த ஆட்டோக்காரங்க..! Inspite of uber and Ola an auto driver who created an indigenous processor sudesi as an alternative gained the support of the people. Sudesi App | ஓலா, ஊபருக்கு மாற்றாக சுதேசி.. மக்களோட அன்பை அள்ளுறாங்க இந்த ஆட்டோக்காரங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/09/6b967b6237041cd0d491d1b745dc3bf4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து சுதேசி என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி மூலம் மக்கள் அரசு நிர்ணக்கப்பட்டுள்ள கட்டணத்தில் ஆட்டோவை பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கார்பரேட் நிறுவனங்களான ஓலா, ஊபர் , போன்ற செயலிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வேறு வழியில்லாமல் இந்த செயலியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற செயலியால் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள், குறிப்பாக கார்பரேட் நிறுவனங்கள் செயலி மூலம் ஒரு பயணத்தை பதிவு செய்து சென்றால் வரும் வருமானத்தில் அதிக அளவில் கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் மக்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறாரகள், ஆட்டோ ஓட்டுநர்களும், பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இவற்றை முற்றிலும் மாற்ற வேண்டும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் செயலி மூலமாகவும்,இலவச தொலைபேசி எண்ணை அறிவித்து, அதன் மூலமாகவும் சரியான கட்டணத்துடன் சேவை செய்து வருகிறோம்.
இந்த நிலையில் தான் சுதந்திரம் என்ற பெயரை மாற்றி சுதேசி என்ற செயலியை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ளோம். தற்போது திருச்சி மாவட்டத்தில் மட்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த செயலி மூலம் மக்கள் சரியான கட்டணத்தை செலுத்தும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டும்தான் நாங்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்துள்ளோம். குறிப்பாக அவசர தேவைகள் மருத்துவமனைக்கு செல்வதற்கு, பிரசவத்திற்கு இலவசமாகவும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம்.இந்த சுதேசி செயலி மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு ட்ரிப் அடித்தாலும் அதற்கு உரிய தொகை நேரடியாக எங்களுக்கே கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சியாக இந்த செயலியை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்றனர். முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளோம், அடுத்த கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், போன்ற பகுதிகளில் இந்த செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். மேலும் இந்த செயலி மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரமும் காக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் இந்த செயலிக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது ,பல ஆண்டுகளாக ஓலா, ஊபர், செயலியை பயன்படுத்தி நாங்கள் வருகிறோம். இந்த செயலி மூலமாக எங்களுக்கு கிடைக்கும் வருவாயில் அதிக அளவு கார்ப்பரேட் நிறுவனங்கள் கமிஷனாக எடுத்துக்கொள்வதால் ,ஆட்டோ ஓட்டுனருக்கு உரிய ஊதியம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், விலை தொடர்ந்து தமிழகத்தில் அதிக அளவில் உள்ளதாலும், காப்ரேட் நிறுவனம் அதிக அளவு கமிஷன் எடுத்துக்கொள்வதாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கி போய் விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இவற்றிலிருந்து மீண்டு ஆட்டோ ஓட்டுநரின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ஒன்றிணைந்து சுதேசி செயலியை உருவாக்கி உள்ளோம். இந்த செயலி மூலமாக கிடைக்கும் வருவாய் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், மக்களும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் செயல்படுவார்கள் என நாங்கள் உறுதி அளிக்கிறோம் . ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருந்தால் மட்டும்தான் இந்த சுதேசி செயலி மூலமாக முன் பதிவு செய்ய முடியும் என்பது அல்ல சாதாரண தொலைபேசி மூலமாக இலவச எண்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம், உரிய நேரத்தில் ஆட்டோக்கள் சென்றடையும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)